ஊட்டச்சத்து குறைபாடு, மரபியல் மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் முடி உதிர்தல் இந்த நாட்களில் பலருக்கும் பொதுவானதாகிவிட்டது. மேலும் இயற்கையாகவே அதை சரி செய்வது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாக இருக்கும்.
கறிவேப்பிலை, அவற்றின் வளமான ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்திற்காக அறியப்படுகிறது.
முடி உதிர்தலை எதிர்த்து, வலுவான, ஆரோக்கியமான இழைகளை மேம்படுத்த, கறிவேப்பிலை ஹேர் ஆயில் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே…
தேவையான பொருட்கள்
1 கப் புதிய கறிவேப்பிலை
1 கப் தேங்காய் எண்ணெய் (அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற வேறு ஏதேனும் எண்ணெய்)
எப்படி செய்வது?
/indian-express-tamil/media/media_files/W2SQYVsTwXmd8Dk3xn6K.jpg)
அழுக்கு அல்லது அசுத்தங்களை அகற்ற கறிவேப்பிலையை நன்கு கழுவுவம். கழுவிய இலைகளை காற்றில் உலர விடவும், ஈரம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் முடி வகைக்கு ஏற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுக்கவும். தேங்காய் எண்ணெய் அதன் ஊட்டமளிக்கும் பண்புகளால் ஒரு பிரபலமான தேர்வாகும், ஆனால் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயும் பயனுள்ளதாக இருக்கும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி மிதமான முதல் மீடியம் தியில் சூடாக்கவும். எண்ணெயின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை பாதுகாக்க தீ மென்மையாக இருப்பதை உறுதி செய்யவும்.
எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலையை கடாயில் சேர்க்கவும். சுமார் 10-15 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும், எப்போதாவது கிளறி விடுங்கள்.
தீயை அணைத்து எண்ணெய்யை அறை வெப்பநிலையில் ஆறவிடவும். எண்ணெயிலிருந்து கறிவேப்பிலையைப் பிரிக்க எண்ணெயை வடிகட்டவும், சுத்தமான ஏர்டைட் கன்டெய்னரில் எண்ணெய்யை சேமிக்கவும், இது எண்ணெயின் ஆற்றலைப் பாதுகாக்க உதவும்.
கறிவேப்பிலை ஹேர் ஆயிலை உங்கள் உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் தடவி சர்குலர் மோஷனில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விடவும், அல்லது அதிக நன்மைக்காக இரவு முழுவதும் கூட வைக்கலாம்.
எண்ணெயை அகற்ற லேசான ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும். அனைத்து எண்ணெய்களும் திறம்பட கழுவப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் இரண்டு முறை ஷாம்பு போட வேண்டியிருக்கும்.
உகந்த முடிவுகளுக்கு, இந்த கறிவேப்பிலை ஹேர் ஆயிலை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“