நீங்கள் முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுகிறவரா அல்லது புதிய முடி வளர முடியாமல் தவிக்கிறவரா? அப்படியானால், வீட்டில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஹேர் ஆயிலை முயற்சிக்கவும். இது புதிய முடி வளரவும், 30 நாட்களில் முடி உதிர்வதை நிறுத்தவும் உதவும்.
மேலும், இந்த எண்ணெய், உங்கள் தலைமுடியை 30 நாட்களில் இரண்டு அங்குலம் வளரச் செய்யும், என்கிறார் டயட்டீஷியன் ரிச்சா கங்கானி.
எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்- 1 கப்
வெங்காயம், நறுக்கியது- 1
சுரைக்காய், நசுக்கியது- 1
வெந்தயம்- 2 டீஸ்பூன்
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
கருஞ்சீரகம் அல்லது எண்ணெய்
கறிவேப்பிலை
விளக்கெண்ணெய்
கண்ணாடி பாட்டில்
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயம், வெந்தயம், கருஞ்சீரகம் அல்லது நைஜெல்லா எண்ணெய், விளக்கெண்ணெய், நசுக்கிய சுரைக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அனைத்தையும் கலந்து கொதிக்க விடவும்.
எண்ணெய் நல்ல நிறம் மாறியதும் தீயை அணைக்கவும்.
இப்போது எண்ணெய் ஆறியவுடன் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். இந்த எண்ணெய்யில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை தேய்க்கவும். ஷாம்பு போட்டு குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் இதைப் பயன்படுத்துங்கள். 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, உங்கள் தலைமுடியை மூடி வைக்கவும். மென்மையான ஷாம்பூவைக் கொண்டு கழுவுங்கள், என்றார் கங்கானி.
குறிப்பு: உங்கள் சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வாக கூறப்படும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும், வல்லுநர்கள் அத்தகைய வைத்தியங்களை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் சோதனையை பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“