அதிகப்படியான அழுக்கு, மாசு, சூரிய ஒளி மற்றும் தூசி ஆகியவற்றை நாம் வெளிப்படுத்தும்போது, முடி அதன் இயற்கையான பிரகாசத்தை இழக்கத் தொடங்குகிறது. எனவே உடல் மற்றும் அதன் உள் அமைப்புகளைப் போலவே, முடிக்கும் அவ்வப்போது ஒரு டீடாக்ஸ் தேவைப்படுகிறது.
உங்கள் தலைமுடிக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
வெள்ளரி, எலுமிச்சை ஷாம்பு
இவை விரைவாக மற்றும் இயற்கையாக முடியை சுத்தம் செய்யும். கோடையில், ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் வெள்ளரி மற்றும் எலுமிச்சை அவசியம் இருக்கும்.
எப்படி செய்ய வேண்டும்?

ஒரு பெரிய எலுமிச்சை மற்றும் நடுத்தர அளவுள்ள வெள்ளரிக்காய் இரண்டையும் தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டவும். அதில் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு நன்கு அலசவும். இது உச்சந்தலையில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு தன்மை மற்றும் கொழுப்பை போக்க உதவும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு நீக்கவும் உறுதியளிக்கிறது.
உங்கள் வழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்துவதைப் போலவே இதையும் பயன்படுத்தலாம்.
இந்த வெளிப்புற பயன்பாடுகளைத் தவிர, உங்கள் உணவு உங்கள் முடியின் தரத்தையும் பாதிக்கிறது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் தலைமுடி நச்சுத்தன்மை நீக்க விரும்பினால், நிறைய தண்ணீர் உட்கொள்ளவும். புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“