முடி உதிர்தல் என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. சரியாக கவனித்த போதிலும் சிலருக்கு மெதுவாகவே முடி வளர்கிறது. உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் பயனுள்ள வீட்டு வைத்தியம் இங்கே இருக்கிறது.
தேவையான பொருட்கள்
¼ கப் – பூவந்தி கொட்டை பொடி
¼ கப் - சீகைக்காய் பொடி
¼ கப் - வெந்தயப் பொடி
ஒரு கிண்ணத்தில், அனைத்து பொடிகளையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், 2-3 டீஸ்பூன் (உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து) எடுத்து, அதில் வெதுவெதுப்பான நீர் அல்லது சூடான க்ரீன் டீ சேர்க்கவும். ஹேர் பேக்’ போல 2-3 நிமிடங்கள் தடவி பின் கழுவவும்.
பலன்கள்
வழக்கமான ஷாம்பு போல அல்லாமல், இது நுரையை உருவாக்காது, ஆனால் இது நிச்சயமாக உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் உணர வைக்கும். சீகைக்காய் பொடி இருப்பதால், நரைப்பதைத் தாமதப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது, மேலும் பாராபென் மற்றும் சல்பேட் ஷாம்பு போலல்லாமல் உச்சந்தலையில் மென்மையாக இருக்கும்.
பூவந்தி கொட்டை பொடியும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டால் இது மிகவும் நல்லது. இது உடலை குளிர்ச்சியாக்கும்.
கடைசியாக, வெந்தயப் பொடி முடியின் அளவை அதிகரிக்க உதவுகிறது, நீங்கள் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“