உங்கள் தலைமுடியில் ஏற்படும் பருவகால துயரங்களைத் தவிர்க்க, இதோ நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஷாம்பு ரெசிபி
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஷாம்பு முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக்கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
* 2 டீஸ்பூன்- பேக்கிங் சோடா
* டீ ட்ரீஆயில்- சில துளிகள்
* 2 டீஸ்பூன்- ஆப்பிள் சைடர் வினிகர்
* 6 டீஸ்பூன்- தண்ணீர்
எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும், இதனால் அது ஒரு நிலையான பேஸ்டாக மாறும். உங்கள் தலைமுடியை சிறிது ஈரப்படுத்தவும். பிறகு பேஸ்ட்டை நேரடியாக உச்சந்தலையில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடம் அப்படியே வைத்து தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.
நன்மைகள்
ஷாம்பூவில் உள்ள பேக்கிங் சோடா எண்ணெய் முடி உள்ளவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இது உச்சந்தலையை சுத்தம் செய்து துளைகளை திறக்கும். முடியின் தரம் மற்றும் முடி உதிர்வின் அளவைப் பொறுத்து, வாரம் ஒருமுறை இந்த ஷாம்புவைப் பயன்படுத்தலாம்.
இது உச்சந்தலையில் உள்ள அமில-கார சமநிலையை சரிசெய்ய உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“