நெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் வளமான மூலமாகும், இது உங்கள் முடி இழைகளின் மந்தமான தன்மை மற்றும் கடினத்தன்மைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
இது ஓரிரண்டு முறை பயன்படுத்தும் போதே, உங்கள் சேதமடைந்த முடிகளை ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது.
எப்படி உபயோகிப்பது?
சில தேக்கரண்டி தூய நெய்யை எடுத்து இரண்டு துளிகள் தேனுடன் கலந்து உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, இது நெய்யுடன் இணைந்து சிறந்த முடிவுகளை தருகிறது.
இந்த மாஸ்க் உங்கள் ஒவ்வொரு முடி இழைக்கும் புத்துயிர் அளிக்கிறது, தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“