ஊட்டச்சத்து குறைபாடு, மரபியல் மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் முடி உதிர்தல் இந்த நாட்களில் பலருக்கும் பொதுவானதாகிவிட்டது.
ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்ஸர் இதற்கு எளிய தீர்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த முக்வாஸ் (விதைக்கலவை) ஊட்டச்சத்து குறைபாடு, பிந்தைய கோவிட், டைபாய்டு, மன அழுத்தம், மோசமான வளர்சிதை மாற்றம், குறைந்த கால்சியம் மற்றும் பலவற்றால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கு பலருக்கு உதவியுள்ளது என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.
முக்வாஸ் ரெசிபி
1 கிண்ணம் ஆளி விதை, அரை கிண்ணம் எள் விதை மற்றும் 1 தேக்கரண்டி இந்துப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் கலக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், கலவையை மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் வறுக்கவும்.
முக்வாஸ் தயார்.
இதை எப்படி உட்கொள்வது?
1 டீஸ்பூன் (தோராயமாக 10 கிராம்) விதைக் கலவையை மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அதிக பித்தம் (அசிடிட்டி, அதிகப்படியான ரத்தப்போக்கு, முதலியன) உள்ளவர்கள், விதைகளை நெய்யில் வறுத்து, ஒரு நாளைக்கு 10 கிராம் சாப்பிடுங்கள், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
என்ன நன்மைகள்?
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளன, இவை முடி உதிர்வைக் குறைப்பதிலும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைக்க உதவுவதால் இது உச்சந்தலையை ஆற்ற உதவுகிறது.
மேலும், ஆளிவிதைகளில் பயோட்டின், ரிபோஃப்ளேவின், நியாசின், பைரிடாக்சின், பாந்தோதெனிக் அமிலம் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன, இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடியை வலிமையாக்கவும் காரணமாகின்றன. விதைகளில் உள்ள வைட்டமின் ஈ, உச்சந்தலையில் ஃப்ரீ ரேடிக்கல்களின் தாக்கத்தை குறைத்து, ஹேர் ஃபாலிக்கிள்ஸை பலப்படுத்துகிறது.
எள் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் சிதைவை மெதுவாக்குகிறது. இந்த விதைகள் முடிக்கு டானிக்காக வேலை செய்கின்றன. கருப்பு எள் விதையில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து உள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இது முடி நரைப்பதை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் லிக்னான் உள்ளடக்கம் சருமத்திற்கு ஊட்டமளித்து மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.
எள் எண்ணெயில் செசாமால் மற்றும் செசமினோல் ஆகிய இரண்டு வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உடலை நச்சுத்தன்மை நீக்க உதவுகின்றன. நீங்கள் கோவிட், டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இது அவசியம், என்று டாக்டர் டிக்சா கூறினார்.
நிபுணரின் கூற்றுப்படி, எள் எலும்புகளுக்கு நல்லது மற்றும் ஆயுர்வேதம் முடி மற்றும் நகங்களை கால்சியத்தின் துணைப் பொருளாகக் கருதுகிறது. எனவே எள், ஒரு வகையில், உங்கள் கால்சியம் அளவை மேம்படுத்தி, அதன் மூலம் உங்கள் தலைமுடியை மேம்படுத்துகிறது.
இந்துப்பு உங்கள் குடல் திறனை மேம்படுத்துகிறது, இது ஆளி மற்றும் எள் விதைகள் இரண்டிலிருந்தும் ஊட்டச்சத்துக்களை ஜீரணிக்கும் மற்றும் உறிஞ்சிவிடும். மேலும், இது கலவையின் சுவையை சேர்க்கிறது.
இயற்கை மருத்துவர் சந்தோஷ் பாண்டே கூறுகையில், ஆளிவிதைகள் பி வைட்டமின்களின் நல்ல மூலமாக நிரம்பியுள்ளன, இது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்க உதவுகிறது.
இதில் வைட்டமின் ஈ கூட உள்ளது, இது உச்சந்தலையில் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளை குறைக்கிறது. எள் விதைகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும், மேலும் அவை பொடுகு மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்கும். எனவே, இந்த விதைகளின் சேர்க்கை முடியை ஊட்டமளிக்கிறது மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது என்று டாக்டர் பாண்டே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.