நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் முடி உதிர்தலை அனுபவித்திருப்போம், முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், பிரச்சினை சில நேரங்களில் வேர்களிலிருந்து உருவாகிறது.
எனவே உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்குவது அவசியம். அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, முடி உதிர்தலுக்கான குறிப்பிட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதே ஆகும்.
வெறும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள். இவை உண்மையில் நன்றாக வேலை செய்யும். இங்கு பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய எண்ணெய் உள்ளது.
தேவையான பொருட்கள்
2 கப் - தேங்காய் எண்ணெய்
½ கப் - எள் எண்ணெய்
½ கப் - விளக்கெண்ணெய்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
நெல்லிக்காயும் சேர்க்கலாம்
1 டீஸ்பூன் – வெந்தயம்
3-4 - செம்பருத்தி மலர்கள்
ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள்
எப்படி செய்வது?
அனைத்தையும் ஒரு இரும்பு கடாயில் ஒன்றாக கலந்து, எண்ணெய் கருமையாகும் வரை, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு தீயை அணைக்கவும். சிறிது ஆறவைத்து, வடிகட்டிய பின் கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தடவலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம், அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் கண்டிப்பா இந்த எண்ணெய் பயன்படுத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“