ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்கள் ஒரு புதிய வீட்டு வைத்தியத்தை ஆரோக்கியத்திற்காக அல்லது தோல் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறுகின்றன. அத்தகைய தீர்வுகள் ரசாயனமற்றவை மற்றும் ஓரளவு உங்களுக்கு உதவக்கூடும் என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு நிபுணரை அணுகவும், மேலும் பேட்ச் டெஸ்ட் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனென்றால், இது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கலப்படமாக இருக்கலாம் அல்லது இயற்கையான மூலப்பொருளுக்கு கூட உங்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.
இன்ஸ்டாகிராமில் செஃப் மேக்னா கம்தார், உங்கள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்துவதாக உறுதியளிக்கும் எண்ணெயின் “மேஜிக்கல் ஹேர் ஆயில்” ரெசிபியை பகிர்ந்துள்ளார்.
உங்கள் தலைமுடியை நிறைய ரசாயனங்கள் கொண்டு ஸ்டைல் செய்தால், உங்கள் தலைமுடியைப் பராமரிக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள். நான் இந்த நறுமண எண்ணெயை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என் தலைமுடிக்கு தடவுகிறேன். முடி உதிர்வைக் குறைக்கவும், முடியை வலுப்படுத்தவும், அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு என் தலைமுடி மிகவும் மிருதுவாகிவிட்டதாக உணர்கிறேன். இதோ செய்முறை என்று அவர் முடி எண்ணெய்க்கான செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.
தேவையான பொருட்கள்
500 மில்லி தேங்காய் முடி எண்ணெய்
7-8 நெல்லிக்காய்
1 டீஸ்பூன் வெந்தயம்
1 டீஸ்பூன் நைஜெல்லா விதைகள் (Nigella Seeds)
10 செம்பருத்தி மலர்கள்
சில கறிவேப்பிலை
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய்யை மிதமான தீயில் சூடாக்கவும். நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் நைஜெல்லா விதைகள் சேர்க்கவும். இதை இரண்டு முறை கொதிக்க வைக்கவும். இப்போது அடுப்பை அணைத்து, சூடான எண்ணெயைக் கிளறிக் கொண்டே இருக்கவும். ஆறியதும் பூக்களை சேர்க்கவும். இப்போது எண்ணெயை மூடி இரவு முழுவதும் வைக்கவும். 24 மணிநேரம் வைப்பது நல்லது. அதை வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
சிறந்த முடிவுகளுக்கு இதை உங்கள் தலைமுடிக்கு தவறாமல் தடவவும்.
இந்த ஹேர் ஆயிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நிபுணர்களை அணுகினோம். “வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் முடியின் அமைப்பை மேம்படுத்த உதவுவதோடு, சேதமடைந்த முடியில் ஒரு கண்டிஷனிங் விளைவையும் ஏற்படுத்தலாம்.
பொடுகு, கடுமையான செபொர்ஹெக் டெர்மடிடிஸ், ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ் (dandruff, severe seborrheic dermatitis, scalp folliculitis) மற்றும் நெற்றியில் முகப்பரு போன்ற பல நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். ஏனென்றால் அவை வியர்வை மற்றும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை மோசமாக்கும், குறிப்பாக மும்பை போன்ற அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில். எனவே உச்சந்தலையில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது, என்று தோல் மருத்துவர் வந்தனா பஞ்சாபி கூறினார்.
டாக்டர் வந்தனா கூற்றுப்படி, பல பெப்டைட் சீரம்கள் (peptide serums) உள்ளன, அவை ஹேர் பாலிக்கிளுக்கு நல்ல வளர்ச்சியையும் வலிமையையும் தருகின்றன. “எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியமான முடிக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“