Hair Care Tips: உங்கள் அம்மா மற்றும் பாட்டியிடமிருந்து தலைமுடி பராமரிப்புக்கான ஆலோசனைகளை பெறுகிறீர்கள் என்றால் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்துவது குறித்து அழுத்தமாக கூறுவதை கவனித்திருக்கலாம். தலைமுடி ஊட்டத்திற்கு முட்டை பெரும் பயன்களை தருகின்றது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நீங்கள் அவற்றை பயன்படுத்த சில வழிகள்
முட்டை மாஸ்க்
முட்டையின் மஞ்சள் கருவைக் தலை முடிக்கு பயன்படுத்த இரண்டு அல்லது மூன்று முட்டைகளை எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விடவும். வாசனைக்காக அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றையும் விடவும். இதை நன்றாக கலக்கி அதை முடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவும்.
முட்டை, வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க்
ஒரு முட்டை, ஒரு தேக்கரண்டி பால், 5 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலவை செய்து அதை தலையில் தடவவும். சிறிது நேரத்துக்கு பிறகு ஷாம்பு கொண்டு தலை முடியை அலசவும்.
முட்டை மற்றும் mayonnaise மாஸ்க்
ஒரு தேக்கரண்டி mayonnaise உடன் ஒரு முட்டையை சேர்க்கவும். இதை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கி அதை முடி வேர்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்த பின்னர் ஷாம்பு கொண்டு கழுவவும்.
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
இந்த மாஸ்க்கை உருவாக்க முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை ஒன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க்
ஒரு முட்டையை ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யுடன் நன்றாக கலக்கி அதை தலையில் தேய்க்கவும். இது 15 முதல் 20 நிமிடங்கள் வரை தலையில் இருக்கட்டும் பின்னர் குளிர்ந்த தண்ணீரால் அலசவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil