Hair Care Tips: நமது உடல் மற்றும் உள்ளுறுப்புகளைப் போல தலைமுடிக்கும் அவ்வப்போது ஒரு இடைஓய்வு மற்றும் நச்சு நீக்கம் தேவைப்படுகிறது. தலைமுடியை அளவுக்கு அதிகமாக அழுக்கு, சூரிய ஒளி, தூசு மற்றும் மாசு ஆகியவற்றில் வெளிப்படுத்தும் போது தலைமுடி அதன் இயற்கை பளபளப்பை இழக்க துவங்குகிறது. மேலும் நாம் தலைமுடி பராமரிப்புக்கு என்று தலையில் பயன்படுத்தும் அனைத்து இரசாயன பொருட்களும் தலைமுடியின் தரத்தை கெடுத்துவிடுகிறது. இதனால் தான் நமது அம்மா மற்றும் பாட்டி ஆகியோர் தலைமுடி பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கும் இயற்கை தீர்வுகளை பயன்படுத்தினர். நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஒரு புதுவாழ்வை வழங்குவதற்கான வழிகளை தேடுகிறீர்கள் என்றால் நீங்களே செய்யக்கூடிய சில எளிய நச்சு நீக்கும் வழிமுறைகள் இதோ.
தேன் ஷாம்பு
நீங்களே வீட்டில் தேன் ஷாம்புவை தயாரிக்கலாம் இது உங்கள் தலைமுடியில் உள்ள நச்சுதன்மையை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழி. இதற்கு உங்களுக்கு ஒரு தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் சிறிய அளவு எண்ணெய் ஆகியவை தேவை.
தேனை தண்ணீருடன் கலந்து நன்றாக கலக்கி அதை உங்கள் உலர்ந்த தலைமுடியில் தேய்க்கவும். பிறகு எண்ணெய் தேய்க்கவும். சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்து (குறிப்பாக மயிர்கால்களில் படும்படி) பிறகு குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் தலை முடியை அலசவும்.
தலைமுடி, சருமம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் தேன் மிகவும் நல்லது. இது ஈரப்பதத்தை தக்க வைக்க சிறந்தது. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவில் இருந்து தேன் ஷாம்புவுக்கு மாறுவது சற்று புதிதான அனுபவமாக இருந்தாலும், இதனால் ஏற்படும் மாற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தெளிவானதாகவும் இருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். எப்போதெல்லாம் உங்கள் தலைமுடிக்கு ஒரு நல்ல கழுவுதல் தேவைபடுகிறது என்று நீங்கள் நினைக்குறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் இதை பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை
பச்சையாக சாப்பிட சிறந்த பொருட்களான வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை விரைவான மற்றும் இயற்கையான தலைமுடி சுத்திகரிப்புக்கும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பெரிய எலுமிச்சம் பழம், நடுத்தர அளவு வெள்ளரிக்காய் மற்றும் எண்ணெய் ஆகியவை தேவை. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனுடன் எண்ணெயையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதை தலையில் தேய்க்கவும். சிறிது நேரத்துக்கு பிறகு நன்றாக கழுவவும். இது உங்கள் தலையில் உள்ள அழுக்கு மற்றும் பிசுபிசுப்புத் தன்மையை அகற்றும். ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சி மற்றும் பொடுகை அகற்றவும் இது பயன்படும். வழக்கமாக நீங்கள் ஷாம்பு பயன்படுத்துவது போல இதை பயன்படுத்தலாம்.
இந்த வெளிப்புற பயன்பாடுகளைத் தவிர நீங்கள் பின்பற்றும் டயட்டும் உங்கள் தலைமுடியின் தரத்தை பாதிக்கும். உங்கள் தலைமுடியின் நச்சுத்தன்மை நீங்க வேண்டுமானால் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் மேலும் புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil