டாக்டர் வைஷாலி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடி உதிர்வைச் சமாளிப்பதற்கும், உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளித்து, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சில வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார்.
Advertisment
ஹெர்பல் ஹேர் மாஸ்க் முடியின் வெளிப்புறத்தின் ஊட்டச்சத்தை கவனித்துக் கொள்வதற்கான சிறந்த வழி என்று அவர் கூறினார்.
நெல்லி- ஆன்டி ஆக்ஸிடன், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது
கரிசலாங்கண்ணி- முடி ஆரோக்கியத்திற்கான சிறந்த மூலிகைகளில் ஒன்று
அதிமதுரம்- முடி வளர்ச்சிக்கும், முடி மீண்டும் வளர உதவுகிறது
திரிபலா - நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக உச்சந்தலையில் எக்ஸ்ஃபாலியேஷன் செய்ய உதவுகிறது.
குறிப்பு: ஹேர் மாஸ்க் செய்யும் போது சிறந்த பலன்களுக்காக தண்ணீருக்குப் பதிலாக, மோர் சேர்க்கலாம்.
உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் கூந்தல் நுனியில் இருந்து தளர்வாக இருந்தால், அது உங்கள் முடியின் வேர்கள் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது, எனவே உங்கள் உச்சந்தலையில் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.
உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உச்சந்தலையைத் தூண்டும் பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
முடிக்கு ஊட்டச்சத்து
உங்கள் உணவில் அதிகம் புரதம் சேர்த்துக்கொள்ளுங்கள்
• புரதம் நிறைந்த உணவுகள் (குறிப்பாக காலை அல்லது மதிய உணவில்)
• பேரீட்சை
• கருப்பு திராட்சை
• இரவு முழுவதும் ஊறவைத்து, தோலுரித்த பாதாம்
• வால்நட்
• கருப்பு எள்
• தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த லட்டு
மற்றொரு ஆயுர்வேத நிபுணரான கரிஷ்மா ஷாவிடம் இதைப் பற்றி மேலும் விவாதித்தோம். உங்களுக்கு முடி உதிர்வு இருந்தால், அதற்கான மூல காரணங்களை நீங்கள் பார்க்க வேண்டும். இது தைராய்டு, PCOS, ஹார்மோன் நிலை, இரும்புச்சத்து குறைபாடு, குறைந்த ஹீமோகுளோபின் அளவு அல்லது வேறு ஏதாவது இருக்கலாம்.
முதலில் சாப்பிட வேண்டியது புரதம்: உங்கள் தலைமுடி புரதத்தால் ஆனது. எனவே அதை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், இரும்புச்சத்தும் சேர்க்கப்பட வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். சாலியா விதைகள் மற்றும் ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் முடிக்கு சிறந்தவை. தேங்காய் மற்றும் நெல்லிக்காய் போன்ற விஷயங்களும் அதிசயங்களைச் செய்கின்றன, என்று அவர் விளக்கினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, நாள்பட்ட மன அழுத்தமும் முடி உதிர்வை ஏற்படுத்தும். ஹெல்த்லைன் படி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வது உட்பட கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும்.
வெங்காய சாறு, ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ஜெரனியம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“