/indian-express-tamil/media/media_files/WO2PRuuUBPbG5pswKOqj.jpg)
Grey hair home remedies
நம்முடைய சமையலறையிலேயே அடர்த்தியான, கருமையான கூந்தலை வளர்க்கக்கூடிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன. அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சீரம், முடி வளர்ச்சியை அபரிமிதமாகத் தூண்டி, கருங்கூந்தலை வெகுவாக வளரச் செய்யும். ஆயுர்வேத மருத்துவத்தின்படி இந்த பிளாக் சீரம் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி, இளநரை தோன்றுவதைத் தடுத்து, முடியை கருமையாக மாற்றக்கூடியது. இந்த அதிசய சீரத்தை எப்படித் தயாரிப்பது, அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை இப்போது பார்ப்போம்.
பிளாக் சீரம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
வெந்தயம்: 1 டேபிள்ஸ்பூன். புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை இதில் நிறைந்துள்ளதால், இது முடியை வேர்க்காலில் இருந்து உறுதியாக வளரச் செய்கிறது. மேலும், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
செம்பருத்தி (காய்ந்தது): 2 பூக்கள். இதில் உள்ள அந்தோசயானின் என்னும் நிறமி, மெலனின் உற்பத்தியை அதிகரித்து நரை முடி உருவாகுவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் இதில் அதிகம்.
கிராம்பு: 1 டேபிள்ஸ்பூன். இது தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடியில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கருஞ்சீரகம்: 1 டேபிள்ஸ்பூன். அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால், இது முடி உதிர்வைத் தடுத்து, மயிர்க்கால்களை வலுவாக்குகிறது.
ரோஸ்மேரி: 2 டேபிள்ஸ்பூன். இது தலையில் நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி, பொடுகை நீக்குகிறது. இதன்மூலம் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.
கறிவேப்பிலை: 10 இலைகள். பீட்டா கரோட்டின் இதில் அதிக அளவில் இருப்பதால், இது முடியை அடர்த்தியாக மாற்ற உதவுகிறது.
தண்ணீர்: 1 கப்                                                                     
பிளாக் சீரம் தயாரிக்கும் முறை:
முதலில், மேலே குறிப்பிட்டுள்ள கிராம்பு, காய்ந்த செம்பருத்தி பூக்கள், கருஞ்சீரகம், வெந்தயம், ரோஸ்மேரி மற்றும் கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் ஒரு இரும்புக் கடாயில் போட்டுக்கொள்ளவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சுமார் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கலவையை நன்றாக ஆற விடவும்.
முற்றிலும் ஆறியதும், ஒரு சுத்தமான வடிகட்டியைப் பயன்படுத்தி அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும்.
வடிகட்டிய கருப்பு சீரத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும்.
பிளாக் சீரத்தை பயன்படுத்தும் முறை:
இரவு படுக்கைக்குச் செல்லும் முன், இந்த சீரத்தை உங்கள் தலைமுடியில் வேர்க்கால் முதல் நுனி வரை நன்கு படும்படி ஸ்ப்ரே செய்யவும்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.
சிறந்த பலன்களைப் பெற, இந்த முறையை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்து வரலாம்.
நன்மைகள்:
செம்பருத்தி, ரோஸ்மேரி மற்றும் வெந்தயம் போன்ற இயற்கையான பொருட்கள் இந்த சீரத்தில் கலந்திருப்பதால், இது அபாரமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், பொடுகுத் தொல்லையைத் தடுத்து, தலையில் ஏற்படும் அரிப்பையும் போக்கும். இந்த இயற்கை முறையை முயற்சி செய்து கருமையான, அடர்த்தியான கூந்தலை பெறுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us