இதுல சல்பர் அதிகம் இருக்கு- முடி உதிர்தல் பிரச்னைக்கு வாரம் ஒருமுறை இந்த 'ஆனியன் ஹேர் பேக்' யூஸ் பண்ணுங்க

வெங்காயத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் சல்பர் அதிகமாக இருக்கிறது. இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய உதவும்.

வெங்காயத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் சல்பர் அதிகமாக இருக்கிறது. இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய உதவும்.

author-image
WebDesk
New Update
Shampoo Diy dandruff

Hair Care

ஊட்டச்சத்து குறைபாடு, மரபியல் மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் முடி உதிர்தல் இந்த நாட்களில் பலருக்கும் பொதுவானதாகிவிட்டது. கீழே உள்ள குறிப்பை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். இது முடி உதிர்வை தடுப்பதோடு முடி வளர்ச்சியையும் தூண்ட உதவக்கூடியது.

Advertisment

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் சாறு - 5 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

Advertisment
Advertisements

விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்

செயல்முறை

ஒரு சுத்தமான கிண்ணத்தில் 4 ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 5 ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவேண்டும்.

இந்த மிக்ஸ் தான் உங்களின் ஹேர்பேக் கலவை. இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன் தலையில் இருந்து தலைமுடி நுனி வரை நன்றாக அப்ளை செய்துகொள்ளவேண்டும். பின்பு 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதனால் தலை முடிக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும்.

பிறகு தலையை 'ஷவர் கேப்' மூலமாக கவர் செய்துவிட்டு தூங்க செல்லலாம். மறுநாள் காலை ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசலாம்.

இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தலை முடி உதிர்வு நின்றுவிடும். அதோடு, தலை முடி நன்கு அதர்த்தியாக ஆரோக்கியமாக வளரும்.

ஏன் வெங்காயம்?

வெங்காயத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்ட்  மற்றும் சல்பர் அதிகமாக இருக்கிறது. இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய உதவும். இதுமட்டுமல்லாமல், தலை முடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: