நம்மில் பெரும்பாலோர் நமது நரைத்த தலைமுடிக்கு விரைவான, பயனுள்ள தீர்வுகளுக்காக இணையத்தைத் தேடுகிறோம். இங்கு நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி பொடியுடன் பிரபலமான தீர்வு உள்ளது. இதை நீங்கள் முயற்சிக்கும் முன் சில நிபுணர் ஆலோசனைகள் உள்ளன.
Hairmegood இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனா மெஹ்ரா, நரையைத் தடுக்க உதவும் ஹேர் மாஸ்க் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
எப்படி செய்வது?
2 டீஸ்பூன் – கரிசலாங்கண்ணி பொடி
1 டீஸ்பூன் – நெல்லிக்காய் பொடி
ரோஸ்மேரி அல்லது அரிசி நீர்
1 டீஸ்பூன் - தேங்காய் எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் தேவையான அளவு எடுத்து நன்கு கலக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஈரமான கூந்தலில் ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தடவவும். இதை தொடர்ந்து பயன்படுத்த இது மேலும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கலாம், என்று மெஹ்ரா கூறினார்.
இருப்பினும், டாக்டர் வந்தனா பஞ்சாபி (dermatologist and trichologist at Khar, and Nanavati Max Superspeciality Hospital) கூற்றுப்படி, முன்கூட்டிய நரைக்கான முதன்மைக் காரணம் முதன்மையாக மரபியல் சார்ந்தது என்றாலும், மற்ற பல நிலைகளும் நரைப்பதில் பங்கு வகிக்கின்றன என்பதை அறிவியல் சான்றுகள் நிரூபிக்கின்றன.
புற ஊதா (UV) கதிர்கள், மாசுபாடு, உணர்ச்சி, அழற்சி காரணங்கள், மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றின் விளைவாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி நரைக்கத் தூண்டும்.
வைட்டமின் பி 12 மற்றும் டி 3, தாமிரம், இரும்பு மற்றும் கால்சியம் குறைபாடு, தைராய்டு நோய், கீமோதெரபியூடிக் மருந்துகள், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் போன்ற பிற காரணிகளும் முடி முன்கூட்டியே நரைக்கத் தூண்டுகின்றன.
எனவே, பல்வேறு எண்ணெய்கள் மற்றும் வீட்டு வைத்தியம் போன்றவை இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதில் எந்தப் பங்கும் இல்லை, ஏனெனில் இது ஹேர் ஃபோலிகுலர் மட்டத்தில் சரி செய்யப்பட வேண்டும், மேலும் உங்கள் தோல் மருத்துவர் சரியான சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டுவார்’ என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“