பல்வேறு சிகிச்சைகள் முடி வளர்ச்சிக்கு உறுதியளிக்கின்றன. அதில் ஒன்று எக் வாஷ்.
முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இந்த ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டமளிக்கவும், முடி வேர்களை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான, நீளமான முடியை மேம்படுத்தவும் இணைந்து செயல்படுகின்றன.
முடி வளர்ச்சிக்கு எக் வாஷ் எப்படி பயன்படுத்துவது?
சரியான முட்டையைத் தேர்ந்தெடுங்கள்: உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து, ஒன்று முதல் இரண்டு முட்டைகள் போதுமானது. குட்டையான கூந்தலுக்கு, ஒரு முட்டை போதும்; நீண்ட அல்லது அடர்த்தியான முடிக்கு, இரண்டு முட்டைகளைப் பயன்படுத்தவும்.
முடி எண்ணெய் பசையாக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தவும். வறண்ட கூந்தலுக்கு, மஞ்சள் கரு அதன் கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக அதிக நன்மை பயக்கும். சாதாரண முடிக்கு, நீங்கள் முழு முட்டையையும் பயன்படுத்தலாம்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை நுரை வரும் வரை நன்கு அடிக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
இதை முடியில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் ஈரப்படுத்தவும். இது ஹேர் கியூட்டிகிள்ஸை திறந்து, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது.
ஒரு பிரஷ் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி, முட்டை கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். வேர்களில் இருந்து தொடங்கி, நுனி வரை தடவுங்கள், எல்லப் பக்கமும் ஹேர் மாஸ்க் தடவுவதை உறுதி செய்யுங்கள்.
/indian-express-tamil/media/media_files/gnY5qyawxy00k3G8Kk7l.jpg)
சர்குலர் மோஷனில் உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எக் வாஷ் அப்ளை செய்த பிறகு, உங்கள் தலைமுடியை ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் ரேப்பரால் மூடி வைக்கவும். இது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, கலவையை உலர்த்துவதைத் தடுக்கிறது
20-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இது ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் மற்றும் முடி தண்டுகளை ஊடுருவி, ஆழமாக ஊட்டமளிக்க போதுமான நேரத்தை வழங்குகிறது.
உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சூடான நீரை தவிர்க்கவும், ஏனெனில் முட்டை வெந்துவிடும். இதனால் கழுவுவது கடினமாகி, எச்சத்தை விட்டுவிடும். உங்கள் தலைமுடியைச் சுத்தப்படுத்தவும், நீடித்த முட்டை வாசனையை அகற்றவும் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.
சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு ஒரு முறை எக் வாஷ் பயன்படுத்துங்கள்.
இதில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களைச் சேர்க்கலாம். இந்த எண்ணெய்கள் கூடுதல் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
பலன்கள்
அதிக புரதச்சத்து முடி இழைகளை பலப்படுத்துகிறது, உடைப்பு மற்றும் பிளவுகளை குறைக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உச்சந்தலையில் ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.
முட்டைகள் கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் சேர்க்கிறது, அதன் ஒட்டுமொத்த அமைப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. பயோட்டின் போன்ற சத்துக்கள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது, முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் அடர்த்தியான முடியை ஊக்குவிக்கிறது.
எக் வாஷ் முயற்சி செய்து, மாற்றத்தை நீங்களே பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“