நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் முடி உதிர்தலை அனுபவித்திருப்போம், மேலும் ஹேர் பேக்ஸ் முதல் விலையுயர்ந்த சிகிச்சைகள் வரை பல்வேறு வைத்தியங்களையும் முயற்சித்திருப்போம், ஆனால் பலன் இருந்திருக்காது. முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஒரு பங்கு வகிக்கிறது என்றாலும், பிரச்சினை சில நேரங்களில் வேர்களிலிருந்து உருவாகிறது. எனவே உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்குவது அவசியம்.
நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் நிறைந்த பொருட்களில் தீர்வு இல்லை, ஆனால் பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை தீர்வு ஒன்று உங்கள் கிச்சனிலேயே உள்ளது, அதுதான் வெந்தயம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெந்தயத்தில் இரும்பு, புரதம் மற்றும் டியோஸ்ஜெனின், யமோஜெனின், கிட்டோஜெனின், ஆல்கலாய்டுகள் (ட்ரைகோனெலின்), ஃபிளாவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஃபைபர் கேலக்டோமன்னன் ஆகியவற்றின் கலவைகளும் உள்ளன.
வெந்தயம், ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. தாய்ப்பாலை உற்பத்தி செய்வதில் சிரமம் உள்ள தாய்மார்களுக்கு இது ஒரு ஆசீர்வாதமாகும், இது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும், வெந்தயம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது, பாலுணர்வை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பல வீடுகளில் உட்கொள்ளப்படுகிறது. வெந்தயம் ட்ரைகிளிசரைடு அளவையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வை நிறுத்தவும் அறியப்படுகிறது; மேலும், வெந்தய எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
பிசிஓஎஸ் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் வெந்தயம் உதவுகின்றன, என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறினார்.
ஊட்டச்சத்து நிபுணர் ஜுஹி கபூர் கூற்றுப்படி, வெந்தயம் ஹேர் பாலிக்கிளுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் உடலியல் வழியில் செயல்படுகின்றன. வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை ஏராளமாக உள்ளன மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களின் களஞ்சியமாகவும் உள்ளது.
அவற்றில் அதிக புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது, இது முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்க உதவுகிறது. வறட்சி, வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு உச்சந்தலை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, என்று அவர் கூறினார்.
வெந்தயத்தை உட்கொள்ளலாம் அல்லது எண்ணெயுடன் கூட பயன்படுத்தலாம்,
வெந்தயத்தை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். வெந்தயத்தை வறுத்து அரைத்து பொடி செய்யவும். சப்பாத்தி உடன் ½ டீஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து சாப்பிடலாம். மாவு பிசையும் போது 2 சப்பாத்திக்கு 1 டீஸ்பூன் என வெந்தயப் பொடி சேர்க்கலாம்.
1-2 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம் அல்லது தேநீராக குடிக்கலாம் என்று ஷா கூறினார். மேலும், ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் 1 டீஸ்பூன் வெந்தய பொடியை உட்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“