பெரும்பாலானோர்க்கு முடி பிரச்சனைகள் எரிச்சலூட்டும் விஷயம். சில பொதுவான முடி பிரச்சனைகளில் பொடுகு, முடி உதிர்தல், வறண்ட முடி மற்றும் மந்தமான முடி ஆகியவை அடங்கும். இந்தப் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், அவற்றிற்கு தீர்வு காண முடியாமல் தவித்து வருகிறோம்
உங்களுக்கு தெரியுமா?
ஆலிவ் எண்ணெய் மந்தமான கூந்தலையும் உயிர்ப்பிக்கும். காரணம், ஆலிவ் எண்ணெய் கொழுப்பு அமிலங்களால் ஆனது, இது கூந்தலின் ஒவ்வொரு இழையையும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
எப்படி செய்வது?
அரை கப் ஆலிவ் எண்ணெயை சில நொடிகள் சூடாக்கவும். இது மிதமான சூட்டில் மட்டுமே இருக்க வேண்டும். அதை உங்கள் கூந்தலில் மசாஜ் செய்து 20-30 நிமிடங்கள் விடவும். பிறகு ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவவும்.
மென்மையான, பளபளப்பான முடிக்கு இந்த குறிப்பை மறக்காம முயற்சி பண்ணுங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“