அரிசி நீர் சருமத்துக்கு செய்யும் அற்புதமான நன்மைகளை பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அரிசி நீர் முடியை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், கூடுதல் துள்ளல் மற்றும் பிரகாசத்தையும் தருகிறது.
அதனால்தான் தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தாவின் பாட்டியும் இந்த முடி பராமரிப்பு ரகசியத்தை நம்புகிறார்.
’ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என் பாட்டி எப்போதும் என் தலைமுடியை மிகவும் கவனித்துக்கொள்வார். குழந்தை பருவத்திலிருந்தே என் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற இயற்கை வைத்தியங்களை பயன்படுத்தினார். அவரது குறிப்புகள் என் தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாத்தன. இன்று, உங்கள் தலைமுடிக்கு நம்பமுடியாத வலிமையையும் பிரகாசத்தையும் தரும் ஹேர் மாஸ்க்கைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’, என்று கீதிகா கூறினார்.
ஜப்பானிய பெண்கள் பயன்படுத்தும் அரிசி தண்ணீர், முடிக்கு அதிசயங்களைச் செய்கிறது.
அரிசி நீர் என்பது உண்மையில் அரிசியை ஊறவைத்த பிறகு மீதமுள்ள மாவுச்சத்து நீர். இதை சுமார் இரண்டு நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து புளிக்க வைக்கலாம் அல்லது வேகவைத்த அரிசி தண்ணீரை கூட பயன்படுத்தலாம் என்று நிபுணர் கூறினார்.
அரிசி நீர் ஏன் நல்லது?
அரிசி நீரில் நிறைய மாவுச்சத்து உள்ளது, இது உங்கள் தலைமுடிக்கு ஹெவி புரோட்டீன் சிகிச்சையாகும். இதில் வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் உள்ளன, மேலும் பயோட்டின் மற்றும் இனோசிட்டால் முடியை வலுப்படுத்தும்.
எப்படி பயன்படுத்துவது?
/indian-express-tamil/media/media_files/ynCrzXWwJ8wckIj6seFp.jpg)
உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு கழுவிய பின் அரிசி நீரில் கழுவவும். அரிசி நீரை சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு மீண்டும் கழுவவும்.
இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தவும். நீங்கள் ஒரு ஸ்பிரே பாட்டிலில் கூட அரிசி தண்ணீரை சேமிக்கலாம். எனவே, நீங்கள் அதை ஒரு ஸ்பிரே ஆகவும் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“