மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது. எனவே இயற்கையாகச் செல்வது காலத்தின் தேவை. இயற்கையான, விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதிப்படுத்த, ஷாம்பூவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன!
Advertisment
சர்க்கரை
முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் காட்டுவதுடன், புதிய முடியின் வளர்ச்சிக்கும் சர்க்கரை உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அனைத்து அழுக்குகளையும் நீக்குகிறது. எனவே, இது ஷாம்புவில் சேர்க்கப்படும் ஒரு பயனுள்ள பொருளாகும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மசாஜ் செய்யவும்.
ரோஸ் வாட்டர்
சருமத்திற்கு சிறந்ததாகக் கருதப்படும் ரோஸ் வாட்டர்’ முடிக்கும் நன்மை பயக்கும். இது உச்சந்தலையில் pH அளவைப் பராமரிப்பதன் மூலம், பொடுகைத் தடுக்கிறது. மேலும் உங்கள் உச்சந்தலையை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. ஆரோக்கியமான முடி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு, உங்கள் ஷாம்புவில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து தொடர்ந்து பயன்படுத்தவும்.
லாவெண்டர் எண்ணெய்
வறண்ட உச்சந்தலை உள்ளவர்களுக்கு, குறிப்பாக குளிர்காலத்தில், இது ஒரு சிறந்த தீர்வாகும். லாவெண்டர் எண்ணெய் பொடுகைத் தடுப்பதன் மூலம் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குளிப்பதற்கு முன், உங்கள் ஷாம்புவில் மூன்று முதல் ஐந்து துளிகள் எண்ணெய் சேர்த்து, பின்னர் உங்கள் தலைமுடியில் தடவவும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்சனைகளை களைக்கும். இது பூஞ்சை தொற்று அபாயத்தை குறைக்கும். எலுமிச்சை பழம் உச்சந்தலையை சுத்தப்படுத்தி, கூந்தலுக்கு நல்ல வாசனையை தருகிறது. ஒரு தேக்கரண்டி ஷாம்பூவில்’ இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.
தேன்
தேன், முடியை ஈரப்பதமாக்கி, நுண்ணறைகளை வலிமையாக்குகிறது, இதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடியை மிருதுவாகவும், பட்டுப் போலவும் ஆக்குகிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் ஷாம்புவில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தடவி, பின் கழுவினால் போதும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “