நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். அந்தளவுக்கு நம் அழகின் ஒரு முக்கிய அங்கமாக முடி இருக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது. கூடுதலாக, நாம் உண்ணும் உணவை கவனிக்காமல் இருப்பது முடி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
ஒருமுறை பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா ஆசாத் தனது முடி பராமரிப்பு ரகசியம் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்து கொண்டார்.
முடி பராமரிப்பு பற்றி ஃபரினா பேசியது இதோ; நீளமான முடி இருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போல தோன்றும். நான் குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் வைப்பேன். மூலிகை எண்ணெய் தான் பயன்படுத்துவேன். பிறகு ஷாம்பூ போட்டு கூந்தலை கழுவி, கண்டீஷனிங் போடுவேன்.
தினமும் தலைக்கு குளிக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு வேலை பார்த்தாலும் வாரத்துக்கு மூன்று முறை தலை கழுவினால் போதும். எண்ணெய் வைப்பதால், வறண்ட முடி, மிருதுவாக மாற ஆரம்பிக்கும். அதேபோல, தினசரி தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது. அப்படி செய்தால், அழுக்கு தலையில் படிந்துவிடும். அதனால், வாரத்தில் 2-3 முறை எண்ணெய் வைக்கலாம். இதுதான் முடியை பராமரிக்க முதல் விஷயம்.
அடுத்ததாக சிலர் கூந்தலை போட்டு சீவிகிட்டே இருப்பாங்க.. அந்தமாதிரி செய்யவே கூடாது. ஒரிரண்டு முறை சீவியபிறகு, விட்டுவிட வேண்டும். பைக்கில் செல்லும் போது முடியை ஃப்ரீ-ஹேர் விடக் கூடாது. இதெல்லாம் அவசியம் நாம் செய்ய வேண்டும்.
அதைத் தாண்டி கூடுதலாக, உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். வீட்டில் எண்ணெய் தயாரிக்க உங்களுக்கு நேரமில்லையென்றால், கடையிலிருந்து பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், கோகனட் ஆயில், வைட்டமின் – ஈ மாத்திரை வாங்கி, இந்த மூன்று ஆயிலையும், வைட்டமின் ஈ மாத்திரையுடன் நன்றாக மிக்ஸ் செய்து நீங்க யூஸ் பண்ணி பாருங்க.. செமயா இருக்கும்.
மேலும் பீர்’ கொண்டு தலைமுடியை கழுவினால் முடி மிருதுவாக, துள்ளலாக இருக்கும். முதலில் பீரை கூந்தலில் தேய்த்து, பிறகு ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். அதேபோல முட்டையும் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
சின்ன வெங்காயம் ஜூஸ் அல்லது பேஸ்டை, தலையின் முடி குறைவாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யலாம். முக்கியமான விஷயம். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்தால், சளி, காய்ச்சல், வரும். இதை தொடர்ந்து செய்யும் போது, புதிய முடி வளர ஆரம்பிக்கும். அதேபோல சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கக் கூடாது. அது கூந்தலுக்கு ரொம்ப நல்லது.
இப்படி ஃபரினா பல முடி பராமரிப்பு குறிப்புகளை, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“