தேங்காய் பால் சுவையானது என்பது அனைவரும் அறிந்ததே. இது ஆரோக்கியத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட, இது முடிக்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டுள்ளது, எனவே, உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் இதை நீங்கள் சேர்க்க வேண்டும்.
Advertisment
தேங்காய் பாலில் கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். வைட்டமின் ஈ மற்றும் கொழுப்புகள் இருப்பதால், முடி எல்லா நேரங்களிலும் ஆழமான கண்டீஷனில் இருப்பதை உறுதி செய்கிறது.
ஹோம்மேட் தேங்காய் பால்!
Advertisment
Advertisements
பால் சந்தையில் கிடைத்தாலும், சிறந்த முடிவுகளுக்கு, அதை நீங்கள் வீட்டில் தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஒரு புதிய தேங்காயைத் துருவி, அதன் பாலை ஒரு மஸ்லின் துணியைப் பயன்படுத்தி பிழியவும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தேங்காய் பாலை ஊற்றவும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் அதை கொதிக்க அனுமதிக்கவும். அடுப்பை அணைத்து குளிர்விக்க விடவும். இரவு முழுவதும் பிரிசரில் வைக்கவும்.
கூந்தல் பராமரிப்புக்கு பாலை பயன்படுத்துதல்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தேங்காய் பால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதன் பலன்களைப் பெற, ¼ கப் பாலை சூடாக்கி, சிறிது சூடாக இருக்கும் போது, அதை நேரடியாக உச்சந்தலையில் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். பால் ஒரு கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
ஷவர் கேப்பை எடுத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்கள் தலையை மூடி வைக்கவும். முடிந்ததும், வழக்கமான மைல்ட் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும், வித்தியாசத்தைக் கவனிக்கவும். சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள்.
எலுமிச்சை சாறு
நீங்கள் எலுமிச்சை சாறுடன் இதை சேர்க்கலாம், குறிப்பாக உங்கள் உச்சந்தலையில் எப்போதும் எண்ணெய் இருப்பதாக நீங்கள் நினைத்தால்.
நான்கு தேக்கரண்டி தேங்காய் பால் மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து நான்கு மணி நேரம் குளிரூட்டவும். பிறகு உச்சந்தலை, கூந்தல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 45-50 நிமிடங்கள் இருக்கட்டும்; உங்கள் தலையை ஷவர் கேப் மூலம் மூடவும். முடிந்தவுடன் மைல்ட் ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவவும், சிறந்த கூந்தல் வளர்ச்சி மற்றும் ஊட்டமளிக்கும் உச்சந்தலைக்கு வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள்!
உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில், தேங்காய் பாலை சேர்த்து, அட்டகாசமான முடி வளர்ச்சியை பெறுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“