இதய நோய்களை கட்டுப்படுத்துவது முதல் வாயுக் கோளாறு நீக்குவது வரை, பூண்டில் பல மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
நாள்பட்ட நோய்களான பக்க வாதம், மாரடைப்பு, மூட்டு வாதம், இருதய நோய்கள், ரத்தகுழாய் அடைப்பு , புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை வரவிடாமல் தடுக்கும் தன்மை உடையது இந்த பூண்டு. பூண்டுச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும். தினசரி உணவில் பூண்டினை சேர்த்து எடுத்துக்கொண்டால் குடல் வாயுவை போக்கும், இருதய நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
என்னதான் பூண்டில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதன் தோல் எப்போதும் குப்பையில் தான் வீசப்படுகிறது, ஆனால், பூண்டில் இருக்கும் நன்மைகளை போல, அதன் தோலிலும் கூட பல நன்மைகள் நிரம்பியுள்ளன.
உங்களுக்கு நரைமுடி இருந்தால், பூண்டு தோலை தூர எறியாமல் இனி சேகரித்து வையுங்கள். அதில், எந்த ரசாயனமும் இல்லாத ஹேர் டை செய்யலாம். இது உங்களுக்கு கருகரு முடியை கொடுக்கும்.
பூண்டு தோலில் இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி?
சமையலுக்கு பூண்டு உரிக்கும் போது, அதன் தோலை தூர எறியாமல் சேகரித்து வைக்கவும். அடுப்பில் இரும்பு கடாய் வைத்து சூடானதும், அதில் இரண்டு கைப்பிடி பூண்டு தோலை போட்டு கருப்பு நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும்.
பூண்டு தோலை ஆறவிடவும். இந்த தோலை மிக்ஸியில் சேர்த்து, பொடியாக அரைக்கவும். கருப்பு நிறத்தில் பொடி கிடைக்கும். இதுதான் ஹேர் டை பவுடர்.
இந்த பவுடரில், ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். உங்கள் வீட்டில் ஆலிவ் எண்ணெய் இல்லையெனில், தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். இதை 5 நாட்கள் அப்படியே வைக்கவும்.
5 நாட்கள் கழித்து, இந்த ஹேர் டை-யை எடுத்து, நரைமுடி உள்ள இடத்தில் தடவவும். இதில் எந்த ரசாயனங்களும் இல்லை என்பதால், நீங்கள் எவ்வளவு நேரம் தலையில் வைத்திருந்தாலும் எந்த பாதிப்பும் வராது.
அடுத்தநாள் வழக்கம் போல, தலையை ஷாம்பூ கொண்டு கழுவவும். உங்கள் நரைமுடி இப்போது கருகருவென மாறியிருக்கும்.
வாரத்தில் 2-3 நாட்கள் இந்த ஹேர் டையை நீங்கள் பயன்படுத்தலாம். சிறந்த பலனுக்கு தொடர்ந்து 3 மாதம் இதை பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு நரைமுடி இருந்தால் இந்த பூண்டு ஹேர் டை-ஐ கண்டிப்பா யூஸ் பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“