/indian-express-tamil/media/media_files/2025/05/13/RpumA2Bw2gFbYLFlazUX.jpg)
Fenugreek hair mask
நீண்ட, அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை பெற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் கூந்தல் உதிர்தல், வறட்சி, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வாக வெந்தய ஹேர் பேக் விளங்குகிறது.
இதில் உள்ள புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் லெசித்தின் போன்ற சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், கூந்தல் வளர்ச்சி வேகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமான ஆரோக்கியமான உச்சந்தலையை பெற உதவுகிறது.
வெந்தயம் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைத்து, வறட்சியை நீக்குகிறது. இதனால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும். வெந்தய ஹேர் பேக் இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, கூந்தலை மிருதுவாகவும் சிக்கல் இல்லாமலும் வைக்க உதவுகிறது.
இங்கு முடி அடர்த்தியாக வளர வெந்தயம் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தன் யூடியூப் வீடியோவில் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி.
வெந்தய ஹேர் பேக் ஒரு இயற்கையான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத கூந்தல் பராமரிப்பு முறையாகும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அடர்த்தியான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் நிச்சயம் பெறலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.