/indian-express-tamil/media/media_files/2025/08/23/hair-oil-apply-2025-08-23-18-23-33.jpg)
Hair oil Apply
கூந்தல் என்பது நம் உடல் அழகின் மிக முக்கியமான ஒரு பகுதி. நம் கலாச்சாரத்திலும், கூந்தல் பராமரிப்பு என்பது ஒரு வெறும் பழக்கம் அல்ல, அது ஒரு கொண்டாட்டம்! நம் பாட்டிகள் சொல்லி தந்த ஒரு எளிய மந்திரம், கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது. ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி அதிகமாக உதிர்ந்து விடுமோ என்ற பயம் பலருக்கும் உண்டு.
நம் கூந்தல், தூசி, மாசு, மற்றும் சூரிய வெப்பத்தால் பலவிதமான சேதங்களை சந்திக்கிறது. கூந்தலின் வறட்சி, உடைதல், மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகள் இதன் விளைவுகள்தான். எண்ணெய் வைப்பது, கூந்தலின் வேர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து, அவற்றை வலுப்படுத்துகிறது. மேலும், இது கூந்தலின் ஈரப்பதத்தை தக்கவைத்து, வறட்சியை தடுக்கிறது. எண்ணெய் மசாஜ், தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தலைக்குக் குளிப்பதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பு எண்ணெய் தேய்த்து, பின்னர் தலைக்குக் குளித்தால், முடி உதிர்வு கணிசமாகக் குறையும் என்கிறார் சந்தோஷி.
மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி
'தலையில் எண்ணெய் வைக்கலாமா, வேண்டாமா?' இது நிறைய பேருக்கு இருக்கும் கேள்வி. நிறைய பேர், 'இப்போ யார் எண்ணெய் வைக்கிறாங்க?'னு கேட்பாங்க. ஒரு நாளைக்கு முடியை ஷாம்பூ போட்டு வாஷ் பண்ணா முடி வளந்துடுமா என்ன?
நிச்சயமாக எண்ணெய் வைக்கணும்! முக்கியமா இந்திய முடியைப் பொறுத்தவரைக்கும் எண்ணெய் ரொம்ப ரொம்ப அவசியம். நம் உடம்பின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், முடி கொட்டுவதைக் குறைப்பதற்கும் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்குது.
அதனால, தலைக்குக் குளிப்பதற்கு முன், ஒரு 15 நிமிடங்களுக்கு முன்னாடியே, கொஞ்சம் எண்ணெய் வச்சுக்கலாம். சலூன் ஸ்பா, ஹேர் ட்ரீட்மென்ட் எல்லாம் இருந்தாலும், ஒரு சாதாரணமா நம்ம முடியைப் பராமரிக்க எண்ணெய், தண்ணீர், நல்ல சாப்பாடு, முக்கியமாக தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த காலத்துல நிறைய பேர், முக்கியமா இளைஞர்கள், இரவுல சரியான தூக்கம் இல்லாமல் இருக்காங்க. இதுவும் முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்”, என்று கூறுகிறார் சந்தோஷி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.