scorecardresearch

அடர்த்தியான, கருகரு முடிக்கு ஹோம்மேட் செம்பருத்தி எண்ணெய்.. எப்படி செய்றதுனு பாருங்க!

செம்பருத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முன்கூட்டிய நரைப்பதை நிறுத்துகிறது, முடியை கருமையாக்குகிறது மற்றும் சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.

Hair care tips
Hair care tips hibiscus hair oil for hair growth

நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். ஆனால், அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, பாராபன்கள் மற்றும் பிற இரசாயனங்கள் இல்லாத இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்குவது போல் எதுவும் இல்லை.

இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.

அதில் ஒன்று தான் செம்பருத்தி. இது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முன்கூட்டிய நரைப்பதை நிறுத்துகிறது, முடியை கருமையாக்குகிறது மற்றும் சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. வழுக்கைத் திட்டுகளை மறைக்கிறது. வறட்சி மற்றும் பொடுகை எதிர்த்துப் போராடுகிறது.

செம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வது?

இரண்டு செம்பருத்தி பூக்கள் மற்றும் குறைந்தது 7-8 இளம் செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைக்கவும். மகரந்தம் தவிர முழு பூவையும் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது, ​​ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன், செம்பருத்தி விழுதை சேர்க்கவும். மிதமான தீயில் வைக்கவும்.

நீங்கள் விருப்பப்பட்டால் இதில் சில வெந்தயம், நெல்லிக்காய் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கலாம். முருங்கை பூக்கள் அல்லது வேப்ப இலைகளையும் தேர்வு செய்யலாம்.

எண்ணெய் கொதி நிலைக்கு வந்ததும் தீயை குறைக்கவும். ஒரு மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, எண்ணெய்யை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும். அதை வெளிச்சத்திலிருந்து விலக்கி வைக்கவும்.

செம்பருத்தி ஹேர் மாஸ்க் எப்படி செய்வது?

முதல் படியைப் பின்பற்றி, மகரந்தத்தை விட்டு, பேஸ்ட் செய்யவும். இதனுடன், 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்க்கவும். இது ஒரு குளிர்ச்சியான ஹேர் பேக்கா இருக்கும்.

இந்த முடி பராமரிப்பு முறையை கண்டிப்பா முயற்சி பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hair care tips hibiscus hair oil for hair growth