Advertisment

முடி உதிர்கிறதா? அடர்த்தியான கூந்தலுக்கு நீங்களே செய்யக்கூடிய ஹோம்மேட் ஷாம்பூ இதோ!

ஆரோக்கியமான, அடர்த்தியான, கருகரு கூந்தலுக்கு வீட்டில் நீங்களே செய்யக்கூடிய ஹோம்மேட் ஷாம்பூ ரெசிபி இங்கே!

author-image
WebDesk
Mar 16, 2022 14:21 IST
Hair care tips

Hair care tips homemade shampoo for treating losing hair

வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது. பருவம் மாறியதால்’ சிலருக்கு தலைமுடியும், சருமத்திலும் வித்தியாசம் நிகழலாம். உங்கள் தலைமுடியில் ஏற்படும் பருவகால துயரங்களைத் தவிர்க்க, இதோ நீங்களே செய்யக்கூடிய எளிதான ஷாம்பு.

Advertisment

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஷாம்பூ’ முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக்கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை கொடுக்கும்.

உங்களுக்கு தேவையான பொருட்கள்

* 2 டீஸ்பூன் - சமையல் சோடா

* டீ ட்ரீ எண்ணெய் - சில துளிகள்

* 2 டீஸ்பூன் - ஆப்பிள் சைடர் வினிகர்

* 6 டீஸ்பூன் – தண்ணீர்

publive-image

செய்முறை

* அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும், இதனால் அது ஒரு நிலையான பேஸ்டாக மாறும்.

* உங்கள் தலைமுடியை சிறிது ஈரப்படுத்தவும்.

* பிறகு பேஸ்ட்டை நேரடியாக உச்சந்தலையில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.

* ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு வழக்கமான தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.

publive-image

இது எப்படி உதவுகிறது?

* ஷாம்பூவில் உள்ள பேக்கிங் சோடா’ எண்ணெய் முடி உள்ளவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இது உச்சந்தலையை சுத்தம் செய்து துளைகளை திறக்கும்.

* முடியின் தரம் மற்றும் முடி உதிர்வின் அளவைப் பொறுத்து, வாரம் ஒருமுறை இந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்.

* இது உச்சந்தலையில் உள்ள அமில-கார சமநிலையை சரிசெய்ய உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment