நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது முதல் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை பல வழிகளில் முடிக்கு நன்மை பயக்கிறது.
நெல்லியில், வைட்டமின் சி மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக்கி, கூடுதல் மென்மையான அமைப்பைக் கொடுக்கும்.
தாதுக்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் கூந்தலுக்கான சூப்பர்ஃபுட் ஆகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
நெல்லியில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
இந்த ஹேர் ஆயிலை, சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும். பெண்களும் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் எண்ணெய் எப்படி செய்வது?
2 நெல்லிக்கனிகளை, 4 துண்டுகளாக வெட்டி, அவற்றை குறைந்தது 1 மணிநேரம் நிழலில் உலர வைக்கவும். நெல்லியின் காய்ந்த துண்டுகளுடன், 2 தேக்கரண்டி எள் எண்ணெய் (sesame oil) மற்றும் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து எண்ணெய்யில் குமிழி வரும் வரை மிதமான தீயில் சூடாக்கவும். வாணலியிலேயே ஆறவிடவும். இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
இந்த ஹேர் ஆயில் முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், கருமையாகவும் மாற்ற உதவுகிறது.
அழகான கருகரு கூந்தலுக்கு கண்டிப்பா இந்த குறிப்புகளை டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“