தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரைத் தவிர்க்கலாம், ஆனால் அவகடோ, வாழைப்பழம், தேங்காய்ப்பால் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து முடி உதிர்வதைத் தடுக்கலாம் என்று நிபுணர் கூறுகிறார்.
தோல் மருத்துவர் சிஎம் குரி, முடி உதிர்வதைத் தடுக்க ஒருவரின் அன்றாட வழக்கத்தில், சில சமையலறை பொருட்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியை வலுப்படுத்துவதோடு, சேதமடைந்த முடியை சரி செய்யும். அவை உங்கள் தலைமுடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குகின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு அவகேடோவை மசித்து அதில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும். அதை உங்கள் தலைமுடியில் தடவி, 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.
கேரட்

கேரட் உங்கள் முடி வேர்களுக்கு சிறந்தது, மேலும் அவை அவற்றுக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. ஒரு ஜூஸரின் உதவியுடன் கேரட் சாற்றைப் பிரித்தெடுத்து 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும். முடி உதிர்வதைத் தடுக்க இதை நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவவும்.
வெங்காயம்
வெங்காயம் முடி உதிர்வை போக்குகிறது மற்றும் மயிர்க்கால்களைத் திறக்கும். பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக முடி உதிர்வதையும் தவிர்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது வெங்காய சாற்றை பிரித்தெடுத்து உங்கள் முடியின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அதை சரியாகக் கழுவவும், ஏனென்றால் சில நேரங்களில் வெங்காயத்தின் வாசனை அப்படியே இருக்கும்.
வாழைப்பழம்

வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் வளமான மூலமாகும். அவை முடியை வலுப்படுத்துவதற்கும் மென்மையாக்குவதற்கும் மிகவும் நல்லது என்று அறியப்படுகிறது. வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்’ சேதமடைந்த மற்றும் பலவீனமான முடியை புதுப்பிக்கிறது.
ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு மசித்த வாழைப்பழத்தை கலந்து, இந்த ஹேர் மாஸ்கை உங்கள் முடியின் வேர்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி, லேசான ஷாம்பூவுடன் நன்கு கழுவவும்.
தேங்காய் பால்

தேங்காய் பால் முடி வேர்களை வலுப்படுத்த நல்லது. தேங்காய் பால் மற்றும் தேன் மாஸ்க்’ உங்கள் முடி இழந்த வலிமையை மீண்டும் பெற ஒரு சிறந்த வழியாகும்.
தேங்காய் மற்றும் தேனை ஒன்றாக கலந்து ஈரமான கூந்தலில் தடவவும். அதை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அப்படியே விடவும். சிறந்த முடிவுகளைப் பெற, லேசான ஷாம்பூவுடன் அதை சரியாகக் கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“