Oral minoxidil முடி பராமரிப்புத் துறையில் புதிதல்ல, முடி உதிர்தல் மற்றும் ஆண் மற்றும் பெண் வழுக்கைக்கு சிகிச்சையளிப்பதற்கு இந்த மருந்து நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மினாக்ஸிடில் ஆரம்பத்தில் ரத்த அழுத்தத்திற்கான வாய்வழி மருந்தாக உருவாக்கப்பட்டது, இது ரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலமும் ஹேர் ஃபாலிக்கிள்ஸை தூண்டுவதன் மூலமும் முடி வளர்ச்சி, தடிமன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நிரூபித்தது.
healthline.com கூற்றுப்படி, மினாக்ஸிடில் ஹேர் ஃபாலிக்கிள்ஸை ஓரளவு பெரிதாக்குவதன் மூலமும், முடியின் வளர்ச்சியின் கட்டத்தை நீட்டிப்பதன் மூலமும் செயல்படும் என நம்பப்படுகிறது. வளர்ச்சி கட்டத்தில் அதிக ஃபாலிக்கிள்ஸ் இருந்தால், உங்கள் உச்சந்தலையில் அதிக முடி கவரேஜ் இருப்பதைக் காண்பீர்கள்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஷாலினி படோடியா, “மினாக்சிடில் முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், வழுக்கையை மெதுவாக்குவதற்கும் பயன்படுகிறது. இது ஹேர் ஃபாலிக்கிளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இருப்பினும், எந்தவொரு டாப்பிக்கல் தயாரிப்பைப் போலவே, “மினாக்ஸிடிலைப் பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் இருக்கலாம்” என்று டாக்டர் கிரண் சேத்தி சுட்டிக்காட்டினார், இதில் உச்சந்தலையில் சிவத்தல், அரிப்பு மற்றும் ஆரம்ப உதிர்தல் ஆகியவை அடங்கும்.
ஓரல் மினாக்ஸிடில், அப்ளை செய்யும் போது எரிச்சல் அபாயத்தைக் கொண்டிருக்காது, ஆனால் சில ஆரம்ப உதிர்தல் இயல்பானது. இருப்பினும், இது ஒரு ரத்த அழுத்த மருந்து என்பதால், சில குறைந்த இரத்த அழுத்தம், அரிதான மயக்கம் அல்லது பிற அரிய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், என்று அவர் மேலும் கூறினார்.
பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் உட்பட, மினாக்ஸிடில் பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதல்ல. மினாக்ஸிடிலைப் பயன்படுத்திய பிறகு, ஒரு நபர் அரிப்பு, வறண்ட, செதில், எரிச்சல் அல்லது உச்சந்தலையில் எரிதல் போன்றவற்றை அனுபவித்தால், உடனடியாக அவரது மருத்துவர் அல்லது தோல் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும், அவர்கள் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு, முகம், கணுக்கால், கைகள் அல்லது வயிற்றில் வீக்கம், மூச்சுத் திணறல், அதிகரித்த இதயத் துடிப்பு, மார்பில் வலி போன்றவற்றை அனுபவித்தால் அவர்கள் அவசர உதவியை நாட வேண்டும், என்று அவர் அறிவுறுத்தினார்.
டாப்பிக்கல் விட ஓரல் மினாக்ஸிடில் சிறந்ததா?
ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று நான் கூறமாட்டேன், ஏனெனில் இரண்டு வடிவங்களும் முடி உதிர்தலுக்கு கிட்டத்தட்ட சமமாக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் உச்சந்தலை மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நிலைமைகள் போன்ற பிற சுகாதார நிலைமைகளை மதிப்பீடு செய்த பிறகு டாப்பிக்கல் அல்லது ஓரல் மினாக்ஸிடிலின் தேர்வு உங்கள் தோல் மருத்துவரால் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.
“ஓரல் மற்றும் டாப்பிக்கல் மினாக்ஸிடில் மூலம், உங்கள் முகம் அல்லது உடலில் சில கூடுதல் முடி வளர்ச்சியை நீங்கள் கவனிக்கலாம் மற்றும் முடிவுகளைக் காண குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இதைச் செய்ய வேண்டும்” என்று டாக்டர் கிரண் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“