/tamil-ie/media/media_files/uploads/2022/08/haircare_1200_getty.jpg)
Siddha DIY remedy to treat grey hair
தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு, நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும்
மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும்.
ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் செய்யக்கூடிய ஒன்றை இங்கே பார்ப்போம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/hair-oil-1.jpg)
தேவையானவை
சுத்தமான வெங்காய விதை எண்ணெய் அளவு 1 லிட்டர்
நெல்லிக்காய் சாறு 500 ml
மருதாணி இலை – 500 ml அளவு
கருவேப்பிலை- 250 ml அளவு
செம்பருத்தி இதழ் சாறு 250 ml
சீரகம் – 100 gm
கிராம்பு 100 gm
முடக்கற்றான் இலை சாறு 500 ml
குன்றி மணி இலைச்சாறு 500 ml
ஓரிதழ் தாமரை இலைச்சாறு 250 ml
வல்லாரை இலைச்சாறு 500 ml
நீர் பிரம்மி இலைச்சாறு 500 ml
கசகசா 100 gm
குளிர் தாமரை இலைச்சாறு 500 ml
அனைத்தையும் கலந்து தைலம் தயாரித்து இதனை வாரம் 5 அல்லது 6 நாட்கள் உபயோகிக்கலாம். இதை தொடர்ந்து பயன்படுத்த, நரைமுடி, முடி உதிர்தல், பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.
தகவல் உதவி
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us