scorecardresearch

இளநரையை சரி செய்ய இப்படி வழி இருக்கு: சித்த மருத்துவ நிபுணர் கூறும் சீக்ரெட்

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது.

இளநரையை சரி செய்ய இப்படி வழி இருக்கு: சித்த மருத்துவ நிபுணர் கூறும் சீக்ரெட்
Siddha DIY remedy to treat grey hair

தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு, நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும்

மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும்.

ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதில்  செய்யக்கூடிய ஒன்றை இங்கே பார்ப்போம்.  

இந்த தைலைம் தொடர்ந்து பயன்படுத்த முடி அடர்த்தியாக வளரும்.

தேவையானவை 

சுத்தமான வெங்காய விதை எண்ணெய் அளவு 1 லிட்டர்

நெல்லிக்காய் சாறு 500 ml

மருதாணி இலை – 500 ml அளவு

கருவேப்பிலை-  250 ml அளவு

செம்பருத்தி இதழ் சாறு 250 ml

சீரகம் – 100 gm

கிராம்பு 100 gm

முடக்கற்றான் இலை சாறு 500 ml

குன்றி மணி  இலைச்சாறு  500 ml

ஓரிதழ்  தாமரை  இலைச்சாறு  250 ml

வல்லாரை  இலைச்சாறு  500 ml

நீர் பிரம்மி இலைச்சாறு  500 ml

கசகசா   100 gm

குளிர் தாமரை  இலைச்சாறு  500  ml

அனைத்தையும் கலந்து தைலம் தயாரித்து இதனை வாரம் 5 அல்லது 6  நாட்கள் உபயோகிக்கலாம். இதை தொடர்ந்து பயன்படுத்த, நரைமுடி, முடி உதிர்தல், பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.

தகவல் உதவி

மருத்துவர் முத்துக்குமார்

 சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

 9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hair care tips siddha diy remedy to treat grey hair