குளிர்காலம் என்பது கூந்தலுக்கு கடினமான நேரம்: வெப்ப சேதம், வறண்ட மற்றும் செதில்களாக இருக்கும் உச்சந்தலை, பொடுகு போன்றவை மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் சில.
பளபளப்பான, துள்ளலான கூந்தலைப் பெற நீங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்றாலும், அழகான கூந்தலுக்கான சிறந்த முடிவுகளை அடைய நீங்கள் மாற்றிக்கொள்ளக்கூடிய சில அன்றாட பழக்கவழக்கங்கள் உள்ளன! ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி மிகவும் பொருத்தமான சில ஆலோசனைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்கள்:
”முடி பராமரிப்பு, மற்ற அழகு நடைமுறைகளைப் போலவே, பல ஆண்டுகளாக அதிக கவனத்தை பெற்றுள்ளது. மக்கள் இப்போது தாங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வும் கவனமும் கொண்டுள்ளனர்.
ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு, அதிக இரசாயன பயன்பாடு போன்ற உங்கள் தலைமுடியை அழிக்கும் பொதுவான நடைமுறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் அன்றாடம் செய்யும், எளிய செயல்கள் கூட நாம் உணர்ந்ததை விட நம் முடிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியாது.
அவரது பரிந்துரைகள் பற்றிய விவரங்களை அறிய படிக்கவும்:
வெந்நீரில் குளியல்
குளிர்ந்த காலத்தில் வெந்நீரில் குளிப்பது சூடாகவும் ஆறுதலாகவும் தெரிகிறது. ஆனால் முடி கழுவும் நாட்களில் அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெந்நீர் முடியின் இழைகளில் உள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கை எண்ணெய்களை அகற்றி, மந்தமானதாகவும், உயிரற்றதாகவும் ஆக்கும். டாக்டர் கோஹ்லி கூறுகையில், "சூடான நீர் உங்கள் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, மிகவும் உலர்ந்ததாகவும், மந்தமாகவும் ஆக்கும்" என்றார்.
நிலையான ஹீட் ஸ்டைலிங்
ஸ்டைலிங் கருவிகள் உங்கள் தலைமுடியை அழகாக்கும் அதே வேளையில், ஹீட் அடிப்படையிலான கருவிகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் தலைமுடியை தினமும் ஸ்டைல் செய்ய ஹீட் பயன்படுத்துவதால் ஈரப்பதம் இழப்பு, உதிர்தல் மற்றும் உடைப்பு ஏற்படுகிறது. இது உங்கள் தலைமுடியை உடையக்கூடியதாகவும், காலப்போக்கில் முனைகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளது. கர்லர்கள் போன்ற நான் –ஹீட் அடிப்படையிலான ஸ்டைலிங் கருவிகளைத் தேர்வு செய்யவும்.
உங்கள் உச்சந்தலையை கவனியுங்கள்
உங்களுக்கு பிரச்சனையற்ற உச்சந்தலை இருந்தால், பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே சென்சிட்டிவான உச்சந்தலை இருந்தால், அதைத் கவனிக்காமல் விடாதீர்கள் - "இது உச்சந்தலையில் எரிச்சல், முடி உதிர்தல் மற்றும் அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி போன்றவற்றை மோசமாக்கும்" என்று டாக்டர் கோஹ்லி எச்சரித்தார்.
ஈரமான கூந்தலுடன் வெளியில் அடியெடுத்து வைப்பது
சில நேரங்களில், முடியை உலர்த்தி, ஸ்டைலிங் செய்து, வீட்டை விட்டு வெளியேற போதுமான நேரம் இருக்காது. "குளிர் காற்று உங்கள் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை இன்னும் உறைய வைக்கிறது, இதனால் இழைகளை பிரித்து, பிரேக்கேஜ், ஸ்பிளிட் எண்ட்ஸ் மற்றும் ஃப்ரீஸ் ஆகியவை அதிகரிக்கும்" என்பதால் இந்த நிகழ்வுகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”