முடி பராமரிப்பு என்பது ஒரு பயணம், அதற்கு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மை தேவை. உங்கள் வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தை புதுப்பிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் ஒரு பயனுள்ள வழக்கத்தைத் தொடங்கி பலன்களைப் பெறுவதற்கு சில வழிகள் உள்ளன. மேலும் அறிய படிக்கவும்.
உங்கள் தலைமுடியைக் கேளுங்கள்
மார்க்கெட்டிங் வித்தைகள் மற்றும் விளம்பரங்கள்’ உங்களிடம் பரந்த அளவிலான தயாரிப்புகளை வைத்திருப்பதை உறுதி செய்கின்றன, ஆனால் அவை அனைத்தையும் வாங்குவது நல்ல யோசனையா? நிச்சயமாக இல்லை, ஏனெனில் உங்கள் தலைமுடிக்கு சில தயாரிப்புகள் மற்றும் ஒரு பிரத்யேக வழக்கம் மட்டுமே தேவை.
முடியின் தரம் பெரும்பாலும் மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளைப் பொறுத்தது; தயாரிப்புகளின் மேற்பூச்சு பயன்பாடு மட்டுமே உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தராது.
முடி மற்றும் உச்சந்தலையில் உங்களுக்கு கடுமையான பிரச்னைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், புதிய தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு முன்’ உங்கள் தோல் மருத்துவரை அணுகவும். ஒவ்வொருவரின் தலைமுடியும் வித்தியாசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் ஒருவருக்கு வேலை செய்யும் தயாரிப்புகள், உங்களுக்கு அதே வழியில் வேலை செய்யாமல் போகலாம்.
மென்மையான தயாரிப்பு
சூரிய ஒளி, ஹீட் ஸ்டைலிங், கலரிங் போன்றவற்றின் மூலம் உங்கள் தலைமுடி ஒவ்வொரு நாளும் பல சேதங்களுக்கு உள்ளாகிறது. எனவே ஹீட் ஸ்டைலிங் செய்வதற்கு முன், இழைகளைப் பாதுகாக்க ஹீட் பாதுகாப்பு கிரீம் அல்லது நுரிஷிங் சீரம் பயன்படுத்துவதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் உங்கள் தலைமுடியைக் கழுவி, காற்றில் உலர வைக்கவும். மாய்ஸ்சரைசிங் ஹேர் மாஸ்க் மற்றும் சூடான எண்ணெய் மசாஜ்’ உங்கள் மேனிக்கு அதிசயங்களைச் செய்யலாம்; உங்கள் உச்சந்தலையில் வினைபுரியும் பொருட்களைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள்.
பட்டு தலையணை உறை பயன்படுத்தவும்
முடி உதிர்தலால் அவதிப்படுபவர்களுக்கு, சாட்டின் (satin) தலையணை உறையைப் பயன்படுத்துவது அதிசயங்களைச் செய்யலாம். சாதாரண பருத்தி, ரேயான் அல்லது பாலி ஃபேப்ரிக்ஸ் விட’ சாட்டின் ஒரு மென்மையான பொருள் என்பதால், இரவில் தூங்கும் போது, உங்கள் முடி இழைகளை சேதப்படுத்தாது. சாடின் தலையணை உறையில் உறங்குவது முடி உதிர்தலுக்கு உதவுவதோடு, ஆடம்பரமான தூக்கத்தையும் பெறுவதை உறுதிசெய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.