Advertisment

முடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே...

Hair Care Tips: மர சீப்புகள் வழக்கமான பிளாஸ்டிக் பொருட்களை விட சிறந்ததாக கருதப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair Care Tips, Wooden Comb can Improve hair growth

கூந்தல் பராமரிப்பு வழி முறைகள்

தலைமுடியை கவனிப்பது நமக்கு இயல்பாகவே வர வேண்டும். இதற்காக நீங்கள் அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் தலைமுடியின் தன்மை மற்றும் அமைப்பு உங்களுக்கு புரியவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வை கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலான மக்கள் முடியின் அடர்த்தியைப் பெருக்க, பொடுகுத் தன்மையைக் குறைக்க, தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள். ஆனால் அவர்கள் மறக்கும் ஒரு விஷயம் சீப்பு.

Advertisment

கலக்குறாங்கப்பா… எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் இனி பேங்க் போக வேண்டிய அவசியமே இல்லை!

இதை நீங்கள் நம்பினாலும் சரி, இல்லையென்றாலும் சரி மர சீப்புகள் வழக்கமான பிளாஸ்டிக் பொருட்களை விட சிறந்ததாக கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் சீப்பு அதிக உடைப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் மர சீப்பு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாகப் பதிவிடுகிறோம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

மர சீப்புகள் பெரும்பாலும் லேசான எடைக் கொண்டவை. மென்மையான முட்கள் கொண்ட, அவை உச்சந்தலையில் சேதத்தை குறைக்கும். இதனால்  இரத்த ஓட்டத்தை மேம்படும். இதனால் முடியின் தரமும் மேம்படும். அதோடு இயற்கையாகவே எண்ணெயை உற்பத்தி செய்து, உச்சந்தலையில் வறட்சி மற்றும் நமைச்சலை நீக்கும்.

குறைவான முடி உதிர்தல்

மர சீப்புகள் முடி உடைவதைத் தடுக்கலாம். நீங்கள் ஏற்கனவே முடியை இழந்து, பல சிக்கல்களைச் சந்திக்கும்போது, மர சீப்பு நன்மை பயக்கும். இது முடி பலவீனமடைவதையும் தடுக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருந்தாலும்,  உலர்ந்து இருந்தாலும், தலைமுடியை இழுக்காமல், மென்மையாக வாரும்.

பொடுகு தொல்லை குறையும்

பொடுகு பிரச்னை பலருக்கும் இருக்கும் பொதுவான முடி பாதிப்பு. முன்னர் குறிப்பிட்டபடி, மர சீப்பு இயற்கையாக எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதன் விளைவாக உச்சந்தலை வறண்டு போகாமல் இருக்கும்.  கூர்மையான பல் கொண்ட சீப்புகள், பிளாஸ்டிக் போன்றவை உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் மர சீப்பு பயன்படுத்த மென்மையானது, மேலும் இது முடி உடைவு மற்றும் உச்சந்தலையில் வெட்டுக்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பொடுகு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு பெரிதும் உதவும்.

இது நீங்கள் வழக்கமாக செய்யும் முடி பராமரிப்பு நடவடிக்கைகளை மேலானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரை இயற்கையான, சமையலறை பொருட்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். உங்கள் அணுகுமுறையில் விடாமுயற்சியுடன் இருங்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Hair Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment