Advertisment

வேகமான முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய், நெல்லிப் பொடி காம்போ: ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை

பேன் முட்டைகளை அழிக்க முடியாவிட்டாலும், முடியில் முழுமையாக வளர்ந்த பேன்களைக் கொல்ல தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Amla

Hair care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேங்காய் எண்ணெய் முடியை பாதுகாக்கும். ஆனால் நெல்லிக்காய் பொடியுடன் சேர்த்து ஊட்டமளிக்கும் மசாஜ் செய்வது, ஒருவரின் முடியை இரட்டிப்பாக்க உதவும், என்று ஊட்டச்சத்து நிபுணர் ராஷ்மி மிஸ்ரா கூறுகிறார்.

Advertisment

உங்கள் முடியின் நீளத்தை அதிகரிக்க, தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடியை கலந்து, முடி மற்றும் முடி வேர்களில் மசாஜ் செய்தால், முடியின் நீளம் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்கும், என்று மிஸ்ரா தன் இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்.

இது வேலை செய்யுமா?

நெல்லியில், வைட்டமின்கள் நிரம்பியுள்ளன என்று சுகாதார நிபுணர் ஷிவானி பஜ்வா விளக்கினார். அவை உடலில் தேவையான வைட்டமின்கள் இல்லாததை நிரப்புகின்றன, மறைமுகமாக முடிக்கு பயனளிக்கின்றன.

நெல்லியில் உள்ள கால்சியம் போன்ற தாதுக்கள், சூரியன் மற்றும் வெப்ப சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்கின்றன, மேலும் டானின், முடியில் கெரட்டினுடன் பிணைக்கிறது, இது உடைவதை கடினமாக்குகிறது. இதில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, இது முடி ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல செயல்பாடுகளையும் கொண்டுள்ளது, என்று பஜ்வா கூறினார்.

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது, இது நம் உடலில் விரைவாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது, வறட்சியை தடுக்க உதவுகிறது, என்று டாக்டர் ரிங்கி கபூர் (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics) கூறினார்.

இது முடி இழைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும், உடைவதைக் குறைப்பதன் மூலமும் முடி வளர்ச்சியை மறைமுகமாக ஊக்குவிக்கும். மேலும், தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை எரிச்சலூட்டும் உச்சந்தலையை ஆற்ற உதவும், என்று டாக்டர் கபூர் கூறினார்.

இது முடி இழைகளை வலுப்படுத்துகிறது, உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது, வெளிப்புற மாசுபாடு அல்லது முடி தயாரிப்புகளில் இருந்து எந்த அழுக்குகளையும் நீக்குகிறது என்பதை பஜ்வா தெளிவுபடுத்தினார்.

பேன் முட்டைகளை அழிக்க முடியாவிட்டாலும், முடியில் முழுமையாக வளர்ந்த பேன்களைக் கொல்ல தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

coconut-oil-

எப்படி அப்ளை செய்வது?

பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் சிறிது சூடுபடுத்தவும், 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூவைக் கொண்டு கழுவவும்.

இந்த கலவை, ஒருங்கிணைந்த விளைவை வழங்கும் என்று நம்பப்படுகிறது, நெல்லிக்காய் தூள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் தேங்காய் எண்ணெய் முடியை ஊட்டமளிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது.

தை பயன்படுத்துவதால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதன் தனிப்பட்ட நன்மைகள் முடிக்கு அதிசயங்களைச் செய்யும் ஆரோக்கியமான அமுதமாக ஒன்றிணைகின்றன, என்று பஜ்வா கூறினார்.

இருப்பினும், கண்மூடித்தனமாக இதைப் பயன்படுத்துவது பின்வாங்கக்கூடும், ஏனெனில் அதிக எண்ணெய் உச்சந்தலையை க்ரீஸாக மாற்றும், குறிப்பாக ஒருவருக்கு எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் இருந்தால். இது ஈரப்பதம் மற்றும் அழுக்குகளை பிடித்து, நோய்களை உண்டாக்குகிறது, என்று பஜ்வா கூறினார்.

Read in English: Can applying amla powder with coconut oil increase hair growth?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment