Hair Color: விருப்பம் போல் தலைமுடியை அலங்கரித்து கொள்கிறோம். நமக்கு பிடித்தவாறே முடியையும் வெட்டியும் கொள்கிறோம். பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றியும் கொள்கிறோம். ஆனால் இந்த நிறங்கள் தலைமுடியில் படுவதால் கூந்தல் வலுவிழந்து போகின்றது.
ஹேர் கலரை எவ்வாறு நீக்கலாம்?
ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். இதனை தலைமுடியில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து அலசி விடவும். எலுமிச்சை தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை அகற்றி கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பேக்கிங் சோடா கூந்தலை வலுவலுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை பராமரிக்கவும்.
தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை நீங்க, எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவி, 20 நிமிடங்கள் வைத்திருந்து தலைமுடியை அலசவும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
ஒரு வேளை ஹேர் கலர் செய்ததும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே வினிகரை தலையில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசிவிடவும். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வந்தால் அந்த செயற்கை நிறத்தை நீக்கிவிட முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"