இந்தியாவில் பெண்கள் ஹேர் கர்லர் அணிந்து வெளியே செல்லும் காலம் வருமா?

பொது இடங்களில் தாங்கள் விரும்பியபடி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்களிடையே ஒரு பரந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஹேர் கர்லர்களை பார்க்க முடிகிறது

சமீபத்தில் மதியவேளையில் ஒரு சுரங்கப்பாதை காரில், ஏழு தென்கொரிய இளம் பெண்கள் பயணிகள் கூட்டத்தின் மத்தியில் அமைதியாக நின்றனர். அவர்கள் மற்ற பயணிகளைப் போலவே பருவகால ஜாக்கெட்டுகள் மற்றும் ஜெர்கின்களை அணிந்திருந்தனர். ஆனால் ஒரு பொருள் அவர்களை தனித்து நிற்க வைத்தது: பழங்கால ஹேர் கர்லர்கள் அவர்கள் கூந்தலில் இறுக்கமாக பொறுத்தப்பட்டிருந்தன.

இந்த பிளாஸ்டிக் ஹேர் கர்லர்கள், பொதுவாக வெல்க்ரோ-வால் மூடப்பட்டவை, சியோலைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் – கஃபேக்கள் மற்றும் உணவகங்களில், பொதுப் போக்குவரத்தில், தெருவில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இதை காணலாம்.

முந்தைய சகாப்தத்தின் அடையாளமாக அவை தோன்றினாலும், அவற்றை அணியும் இளம் பெண்கள், அதன் செயல்பாட்டுடன் மட்டுமல்லாமல், பாலினம் மற்றும் அழகு பற்றிய கருத்துக்களை மாற்றுவதற்கான குறியீடு மற்றும் நாட்டின் தலைமுறைப் பிரிவின் பிரதிபலிப்பாக உள்ளனர்.

ஜங் யூன்-வோன், சியோலில் உள்ள 23 வயதான கல்லூரி மாணவர், தினமும் கர்லர்களைப் பயன்படுத்துகிறார். ஒரு நிகழ்வு அல்லது கூட்டத்திற்குச் செல்வதற்கு முன் தனது கூந்தலில், சரியான சுருட்டைப் பராமரிப்பதற்காக வீட்டிற்கு வெளியே அணிந்திருப்பதாகக் கூறினார். மற்றவர்கள் அதை பொருத்தமற்றதாக பார்ப்பார்கள் என்ற பயத்தின் காரணமாக, அவள் அவள் அம்மா அவளை நிறுத்தச் சொன்னாள். ஆனால் ஜங்கைப் பொறுத்தவரை, செல்லும் வழியை விட, இலக்கில் தோற்றம் மிகவும் முக்கியமானது

நீங்கள் விரும்பும் நபர்களுக்கு முன்னால் நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தென் கொரிய சமூகத்தில் ஒரு காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்ட மரபுகளை கவனிக்காத பல இளைஞர்களால் அந்த சுதந்திர மனப்பான்மை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை எனவும், அதற்கு பதிலாக அதிக கவலையின்றி வாழ்வதைத் தேர்ந்தெடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

முந்தைய தலைமுறை பெண்களைப் போல, ஆண்களின் பார்வையில் இருந்து மறைத்து, தனிமையில் தயாராவது அவசியம் இல்லை. மற்றவர்களும் அவர்களின் அழகுப்படுத்தும் முயற்சிகள் தெரிந்தால் மிகவும் குறைவாகவே அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் நீங்கள் சுரங்கப்பாதையிலோ அல்லது ஓட்டலிலோ கர்லர் வைத்திருந்தாலும் பரவாயில்லை. தென் கொரியாவில் ஹேர் ரோலர்ஸ் பொதுவாக பேங்க்ஸில் (கூந்தலின் முன்பாகம்) அணியப்படுகின்றன. ஒவ்வொன்றும் 80 சென்ட் மட்டுமே என்பதால், அவை பெரும்பாலான பெண்களுக்கு அணுகக்கூடிய மற்றும் மலிவானதாக இருக்கிறது.

கொரிய பிரபலங்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில், கர்லர்களுடன் இருக்கும் படங்களை வெளியிடுகிறார்கள்.  வயதான பெண்களும், கர்லர் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

51 வயதான லீ ஜியோங்-ஜினுக்கு 21 வயதான ஒரு மகள் உள்ளார், அவர் வீட்டிற்கு வெளியே அடிக்கடி கர்லர்களை அணிவதை அவரது தாயால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது பதின்ம வயதில், உயரமான, பெரிய சிகை அலங்காரங்களை உருவாக்க ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது, தென் கொரியாவில் பிரபலமாக இருந்ததை தன்னால் தொடர்புபடுத்த முடிகிறது. அப்போதிருந்த பழைய தலைமுறையினர் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று நினைத்தார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

ஆயினும்கூட, 54 வயதான கிம் ஜி-இன், அழகு மற்றும் பாலினம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பின்பற்றாமல், பொது இடங்களில் தாங்கள் விரும்பியபடி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்களிடையே ஒரு பரந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஹேர் கர்லர்களை பார்க்க முடிகிறது என்கிறார்., 20 வயதில் ஒரு பெண் சுரங்கப்பாதை தரையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன் மேக்கப் பொருட்கள் பரந்து கிடப்பதை நான் பார்த்திருக்கிறேன். தனது காலத்தில், ஒரு பெண் தலைமுடியில் ரோலர்களுடன் வெளியே செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது, என்று அவர் கூறினார்.

தென் கொரியாவில் அழகு தரநிலைகள் மற்றும் பாலினம் பற்றிய கட்டுப்படுத்தப்பட்ட பார்வைகளுக்கு எதிர்ப்பு என்பது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு #MeToo குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரவிய பிறகு, சில பெண்கள் “எஸ்கேப் தி கோர்செட்” என்று பதிலளித்தனர், அவர்கள் ஒப்பனையை கைவிட்டு, உடல் கவர்ச்சி பற்றிய அடக்குமுறை நம்பிக்கைகளை எதிர்த்து கூந்தலை கிண்ண வெட்டுக்கள் (Bowl Cuts) செய்த்னர்.

இருப்பினும், இந்த நாடு உலகின் முன்னணி அழகுத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய அழகு சந்தையில் கிட்டத்தட்ட 3% என என்று அமெரிக்க அரசாங்க நிறுவனமான இன்டர்நேஷனல் டிரேட் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் இருந்தபோதிலும் தென் கொரிய அழகுசாதனத் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய அழகு நிறுவனங்களில் ஒன்றான Amorepacific, 2021 முதல் காலாண்டில் விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 8.5% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அழகு சாதனப் பொருட்களின் ஏற்றுமதியும் முந்தைய ஆண்டை விட 16% அதிகரித்துள்ளது என்று கொரியா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் தாங்கள் அப்படியே வருவதையே விரும்புவதாகச் சொல்லும் இளைஞர்களும் அதிரித்துள்ளனர்.

சியோலில் உள்ள 25 வயதான கிம் டோங்-வான் என்ற ஆராய்ச்சியாளர், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களில் பெண்கள் ஹேர் கர்லர் அணிவதை முதன்முதலில் பார்த்தபோது குழப்பமடைந்ததாகக் கூறினார். இப்போது அவர் “அலட்சியமாக” இருப்பதாகவும், இப்போதெல்லாம் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை மறைக்க அழுத்தம் கொடுப்பது குறைவு என்றும் மேலும் அதிக மரியாதை கோருகின்றனர். 

காலம் மிகவும் மாறிவிட்டது,” என்றார்.

இந்த கட்டுரை முதலில் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hair curlers in public just how they roll

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com