4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை மருத்துவத்துக்கும் இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள். காரணம் அதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.
விளக்கெண்ணெயில் மற்ற எண்ணெய்களில் இல்லாத ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தலையில் சிறிய அளவில் வழுக்கை இருந்தால், விரல் நுனியில் சிறிது எண்ணையை எடுத்து, வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளருவதை கண்கூடாகக் காணலாம்.
விளக்கெண் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது
விளக்கெண்ணையை வெந்தயப் பொடியுடன் கலந்து கொள்ளவும். எண்ணெய் தலை முழுவதும் படும்படி நன்றாக தேய்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
மெல்லிய காட்டன் துணியால் தலையைக் கட்டியபின், ஆவி பிடிக்கவும். அதன்பின் மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை நன்கு கழுவவும்.
வாரம் ஒரு முறையேனும் இந்த குறிப்பைப் பின்பற்றுங்கள். இதை தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி உதிர்வது குறைவதுடன் அதன் வேர்க்கால்கள் பலம் பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“