முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஒரு பங்கு வகிக்கிறது என்றாலும், பிரச்சினை சில நேரங்களில் வேர்களிலிருந்து உருவாகிறது.
எனவே உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்குவது அவசியம். அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, முடி உதிர்தலுக்கான குறிப்பிட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதே ஆகும்.
ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குமாரி இன்ஸ்டாகிராமில் முடி உதிர்வதைத் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயில் ரெசிபியைப் பகிர்ந்து கொண்டார், இது பாலினம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எவரும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
2-3 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
20-25 கறி வேப்பிலை
1/2 டீஸ்பூன் வெந்தயம்
1/2 டீஸ்பூன் கருஞ்சீரகம்
1 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெயை ஊற்றி, அதில் கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்க்கவும். இதை 5-6 நிமிடங்கள் தொடர்ந்து சூடாக்கவும். முடிந்ததும் தீயை அணைத்து, எண்ணெயை மூடி, 1-2 நாட்களுக்கு குளிர்ந்த உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும், வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
அடைபட்ட ஹேர் பாலிக்கிள்ஸை திறந்து, முடி வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை ஹேர் பாலிக்கிள்ஸை வலுப்படுத்துகின்றன மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக்குகின்றன.
இந்த இலைகளில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் பி6 முடி உதிர்வதைத் தடுக்கிறது.
மெலனின் உற்பத்தி செய்வதன் மூலம் முடியை கருப்பாக வைத்திருக்கிறது, இது நரைப்பதை குறைக்கிறது.
கருஞ்சீரகம் நன்மைகள்
கருஞ்சீரகம் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முடிக்கு சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும்.
இது முடி சேதத்தை மாற்றியமைக்கிறது, முடி மீண்டும் வளர உதவுகிறது மற்றும் முடி நரைப்பதை தடுக்கிறது.
வெந்தயம் நன்மைகள்
ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நிகோடினிக் - இவை அனைத்தும் முடி உதிர்வைக் குறைக்க உதவுகின்றன.
இதில் லெசித்தின் உள்ளது, இது ஹேர் ஃபாலிக்கிள்ஸை பலப்படுத்துகிறது, இதனால் வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற உச்சந்தலையில் உள்ள பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
மாய்ஸ்சரைசிங் மூலம் கூந்தலின் துள்ளல்களை மீண்டும் கொண்டு வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“