சின்ன வெங்காயத்தை அரைச்சு கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து: ஹேர் பால் பிரச்னைக்கு டாக்டர் நித்யா சொல்லும் தீர்வு
முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மூலிகைகளில் கரிசலாங்கண்ணி முக்கியமானது. இதன் சாறு எடுக்கும்போதே கைகளில் கருப்பு நிறம் படியும் அளவிற்கு இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மூலிகைகளில் கரிசலாங்கண்ணி முக்கியமானது. இதன் சாறு எடுக்கும்போதே கைகளில் கருப்பு நிறம் படியும் அளவிற்கு இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
முடி உதிர்வு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. "கொத்து கொத்தாக முடி கொட்டுகிறது, வேர்களில் இருந்தே வருவது போல் இருக்கிறது" என்று பலர் கூறுவதைக் கேட்கிறோம். முடி உதிர்ந்துவிட்டால் மீண்டும் வளருமா என்ற கவலை பலருக்கும் உண்டு. ஆனால், 35 முதல் 40 வயது வரை முடி மீண்டும் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் டாக்டர் நித்யா.
Advertisment
முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மூலிகைகளில் கரிசலாங்கண்ணி முக்கியமானது. இதன் சாறு எடுக்கும்போதே கைகளில் கருப்பு நிறம் படியும் அளவிற்கு இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பயன்பாடு:
Advertisment
Advertisements
கரிசலாங்கண்ணி சாறு 50 மிலி எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வரலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கல்லீரலுக்கும் ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.
முடி உதிர்வுக்கு உதவும் சின்ன வெங்காயம்
சிலருக்கு தலையில் பூஞ்சை தொற்று (fungal infection) காரணமாக வட்ட வட்டமாக முடி உதிர்வு ஏற்படும். இத்தகைய சமயங்களில் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
பயன்பாடு:
சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து முடி உதிர்ந்த இடங்களில் தடவலாம்.
முடி கொட்டுதல், அடர்த்தி இல்லாமை, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஆண், பெண் இருபாலருக்கும் பெரும் கவலையாக உள்ளன. சரியான பராமரிப்பு மற்றும் இயற்கை வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.