இதை செய்யலனா… என்ன பண்ணாலும் முடி கொட்டுவது நிற்காது; டாக்டர் விஜி அட்வைஸ்

முடி உதிர்வுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகு. பொடுகை சரிசெய்யாமல், முடி உதிர்வுக்கு நீங்கள் என்னதான் சிகிச்சை எடுத்தாலும், அது கட்டுப்படாது.

முடி உதிர்வுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகு. பொடுகை சரிசெய்யாமல், முடி உதிர்வுக்கு நீங்கள் என்னதான் சிகிச்சை எடுத்தாலும், அது கட்டுப்படாது.

author-image
WebDesk
New Update
Hair fall solution

Hair fall solution dandruff treatment gut cleansing for hair

முடி கொட்டுவது என்பது நம்மில் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு நாம் பலவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் என பலவற்றை முயற்சிக்கிறோம். சில சமயங்களில் தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், பிரச்சனை மீண்டும் தலைதூக்குகிறது. முடி உதிர்வுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகு. பொடுகை சரிசெய்யாமல், முடி உதிர்வுக்கு நீங்கள் என்னதான் சிகிச்சை எடுத்தாலும், அது கட்டுப்படாது.

பொடுகு ஏன் வருகிறது?

Advertisment

பெரும்பாலானோருக்கு பொடுகு வருவதற்கான முக்கிய காரணம், நம் குடலில் பூஞ்சைகளின் வளர்ச்சி அதிகரிப்பதே ஆகும். குடலில் பூஞ்சை வளர்ச்சி அதிகமாகும்போது, அது தானாகவே பொடுகாக வெளிப்படுகிறது.

தீர்வு என்ன?

முடி உதிர்வு மற்றும் பொடுகை நிரந்தரமாக சரிசெய்ய, நாம் முதலில் செய்ய வேண்டியது நம் குடலை சுத்தப்படுத்துவதுதான். குறிப்பாக, குடலில் உள்ள புழுக்களுக்கான சிகிச்சையை (worms treatment) முதலில் மேற்கொள்ள வேண்டும். சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் இதற்கான மருந்துகள் தாராளமாக கிடைக்கின்றன.

Advertisment
Advertisements

இந்த டீடாக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, சிலருக்கு தளர்வான மலம் (loose stools) வெளியேறலாம். இது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதன் அறிகுறியாகும். இவ்வாறு குடல் சுத்தமான பிறகு, நீங்கள் முடி உதிர்வுக்கான சிகிச்சையை தொடரும்போது, நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: