Hair Fall: முடி உதிர்தல் சிலருக்கு பொதுவான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதிக மன அழுத்தம் காரணமாக இது பலருக்கு வரக்கூடும். தினமும் தூங்கி எழும் பொது தலையணையில் ஒட்டியிருக்கும் முடி உங்களை அதிக மனக்கவலைக் கொள்ள செய்கிறதா ! கவலையை விடுங்கள் இதை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்திய முறைகளை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.
தேங்காய் எண்ணெய்
நீங்கள் இதை குறித்து பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் மீண்டும் மீண்டும் சொல்வதில் சில உண்மை இருக்கிறது. தேங்காய் எண்ணெய் தேய்ப்பது முடி உதிர்தல் பிரச்சனையை கட்டுப்படுத்துவதோடு புரதம் குறைவதையும் தடுக்கிறது. இது மயிர்கால்களுக்குள் சென்று வலுப்படுத்தி ஊட்டமளிக்கிறது.
தயிர்
Probiotics அதிகமாக உள்ள தயிர் உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும். தயிரை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் இது தலைமுடி texture ல் ஏற்படுத்தும் மாற்றத்தை உடனடியாக காணலாம். தயிரை தலைமுடியில் தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊரவைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
முட்டை மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கரு தலைமுடியை வலுப்படுத்துவதற்கு அறியப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. இரண்டு அல்லது மூன்று முட்டைகளை உடைத்து அதை ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை நன்றாக கலக்கி அதை தலை முடியில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊரவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.
கற்றாழை
Proteolytic enzyme நிறம்பியுள்ள கற்றாழை உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க உதவுகிறது. கூந்தலை மென்மையாக்கி, பொடுகு மற்றும் அரிப்புகளை கணிசமாக குறைத்து கற்றாழை கூந்தலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்கிறது. நீங்கள் கற்றாழை சாறை குடிக்க ஆரம்பித்தால் உங்கள் சருமத்திலும் ஒரு மாற்றத்தை உணரலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”