இன்று பல பேருக்கு தலை முடி சம்மதப்பட்ட பாதிப்புகள் வருகின்றன.அதற்கு தீர்வு காண மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவு செய்கின்றனர்.ஆனாலும் அது உபாயகமாக இல்லை. இயற்கையான முறைகள் பல உள்ளன அதை செய்தாலே முடி சம்மந்தமான பாதிப்புகள் இருக்காது. அவற்றில் சில.....
1.வெங்காயம்
வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இப்போது வெங்காயத்தை பயன்படுத்தி தலை முடியை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :
வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.
முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால்,உச்சந் தலையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும்.
இதனால் முடி கொட்டுவது குறையும்,இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இளநரையை வர விடாமல் செய்யும். வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது.
தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும்.
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை: வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.
2.தேயிலை - (Green Tea)
தேயிலை - (Green Tea) இப்போது நீங்கள் தினமும் தூக்கி எறியும் தேயிலையில் முடி வளர்ச்சிக்கான சரியான தீர்வு இருக்கிறது. பச்சை தேயிலையில் உள்ள ஆன்டிஆக்சிடின்ஸி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது.
3.முட்டை
முட்டை மாஸ்க் உலகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களால், சிறிய மாற்றங்களுடன், பின்பற்றப்படும் வீட்டு சிகிச்சை இது. இதில் அதிக அளவிலான புரதங்கள் உள்ளதால் புதிய முடி உருவாவதற்கு உதவிடும். மேலும் சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலீனியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் ஆகியவைகளும் இதில் வளமையாக உள்ளது.
பயன்படுத்தும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட் உருவாகும் வகையில் அதனை நன்றாக கலந்திடவும். இதனை தலை முடி முழுவதும் கவனமாக தடவுங்கள். பின் அதை அப்படியே ஒரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசிய பின்பு ஷாம்பு போட்டு குளித்திடுங்கள்.
4.தேங்காய் பால்
தேங்காய் பால் தேங்காய் பாலில் புரதம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் அதிமுக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வையும், உடைதலையும் குறைக்கும்.
பயன்படுத்தும் முறை: தேங்காயில் இருந்து பாலை எடுக்கவும். இதனை தலையில் வேண்டிய இடத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். மிகச்சிறந்த முடி வளர்ச்சிக்கான சிகிச்சை இதுவாகும்.
5.நெல்லிக்காய்
நெல்லிக்காய் நெல்லிக்காயில் உள்ள பல்வேறு அதிசய குணங்களைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ள கிடைங்கு என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும் நெல்லிக்காய், தலை முடியின் நிறமியையும் மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை: 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்திடுங்கள். இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள்.