தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யில் இந்த மூலிகை சேருங்க.. காடு மாதிரி முடி வளரும்; டாக்டர் கார்த்திகேயன்

பாரம்பரிய மருத்துவத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம்தான் வேம்பாளம் பட்டை!

பாரம்பரிய மருத்துவத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம்தான் வேம்பாளம் பட்டை!

author-image
WebDesk
New Update
hair growth karthikeyan

தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யில் இந்த மூலிகை சேருங்க.. காடு மாதிரி முடி வளரும்; டாக்டர் கார்த்திகேயன்

அடர்ந்த, நீளமான கூந்தல் வேண்டும் என்பது பலரது கனவு. இதற்காக கண்ட கண்ட எண்ணெய்களையும், ஷாம்புகளையும் பயன்படுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் ஏராளம். ஆனால், நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம்தான் வேம்பாளம் பட்டை!

Advertisment

வட இந்திய விளம்பரங்களில் நீளமாகத் தொங்கும் கூந்தலுடன் தோன்றும் நபர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் பயன்படுத்தும் ரகசியம் என்னவாக இருக்கும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? ஒருவேளை அது வேம்பாளம் பட்டையாக இருக்கலாம். அடர் சிவப்பு நிறத்தைக் கொண்ட இந்த மூலிகை, நேரடியாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், இதன் மருத்துவக் குணங்கள் ஏராளம் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

வேம்பாளம் பட்டையின் மறுபெயர்கள்:

Advertisment
Advertisements

தமிழில் வேம்பாளம் பட்டை என்று அழைக்கப்படும் இது, ஹிந்தியில் ரத்தன்ஜோட் ரூட் என்றும் ஆங்கிலத்தில் ஆல்கனா டிங்டோரியா என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் தலைமுடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக இது கருதப்படுகிறது.

இந்த செடியின் வேர்கள் முக்கியமாக உணவுத் தொழிலில் இயற்கையான சிவப்பு நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடி ஆரோக்கியம், தோல் நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள், சுவாசக் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் இது மருந்தாகிறது என்பது வியப்பளிக்கக்கூடிய உண்மை. மேலும், நல்ல தூக்கம் வரவும் இது உதவுகிறது. உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இதன் பயன்பாடுகள் இருந்தாலும், நாம் இன்று முக்கியமாகப் பார்க்கப்போவது தலைமுடி மற்றும் சருமத்திற்கான இதன் நன்மைகளைத்தான். இதனை மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறி உள்ளார்.

ஆல்கனா டிங்டோரியா குறித்து நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் காணப்படும் ஆன்டி-இன்ஃபெக்டிவ் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் தொற்றுக்களைக் குறைக்கவும், அலர்ச்சிகளைச் சரிசெய்யவும் உதவுகின்றன என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். 

சந்தையில் கிடைக்கும் பல ஹேர் ஆயில்களில் வேம்பாளம் பட்டை முக்கிய மூலப்பொருளாக இடம் பிடித்திருக்கிறது. ஆனால், நீங்களே இதை வைத்து தரமான ஹேர் ஆயிலை தயாரிக்க முடியும். பல்வேறு மூலிகைகளுடன் வேம்பாளம் பட்டையைச் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஹெர்பல் ஹேர் மிக்ஸ், தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலிமை சேர்க்கும். முடியின் ஆரோக்கியத்திற்கு இது நிச்சயம் நன்மை பயக்கும். வேம்பாளம் பட்டையில் இயற்கையாகவே அல்லானின்ஸ் மற்றும் ஷிகோனின்ஸ் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ரசாயனங்கள்தான் இதன் நிறத்திற்கும், மருத்துவ குணங்களுக்கும் காரணம். இவை தலைமுடி மற்றும் உடலின் பலவிதமான நலன்களுக்கு உதவுகின்றன என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். 

காயவைக்கப்பட்ட வேம்பாளம் பட்டை கடைகளில் கிடைக்கும். இது கருப்பாக இருந்தாலும், இதன் உள்ளே அடர் சிவப்பு நிறம் ஒளிந்திருக்கும். நிறைய பட்டைகளை ஒன்றாகப் பார்க்கும் போது இந்த சிவப்பு நிறத்தை நம்மால் காண முடியும். சந்தையில் கிடைக்கும் தரமான வேம்பாளம் பட்டையை வாங்கி, வீட்டிலேயே மூலிகை எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: