Advertisment

Hair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்... கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்

Natural Hair Growth Tips; முடி வளர்ச்சிக்கு உகந்ததாக பட்டியல் இடப்படும் உணவு வகைகளை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair Growth, Best Foods For Hair, Foods For Hair Growth, முடி வளர டிப்ஸ்

Hair Growth, Best Foods For Hair, Foods For Hair Growth, முடி வளர டிப்ஸ்

Foods For Hair Growth: நெடுங்கூந்தலுக்கான தேடல் இன்றில்லை, சங்க காலத்தில் இருந்தே இருந்து வந்திருக்கிறது. நீண்ட கூந்தல் பெருமையாகவும், அழகாகவும் வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனவே நீண்ட, கரும் கூந்தல் மீதான காதல் அனைவருக்கும் இயற்கையானது.

Advertisment

எனவே முடி உதிர்தல் என்பதை சாதாரண பிரச்னையாக எடுத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை. இதற்காக எத்தனையோ க்ரீம்கள், எண்ணெய்களை பயன்படுத்துவோர் உண்டு. அதனால் பலன்கள் கிடைக்காமல் போவதுண்டு. அப்படி எதுவும் இல்லாமல் சிம்பிளாக உணவு மூலமாகவே முடி உதிர்வதை தடுக்கவும், முடி வளர்வதை உறுதி செய்யவும் முடியும் என்கிறார்கள் மருத்துவ உலகினர்.

குறிப்பாக வைட்டமின், மினரல், புரோட்டீன் சார்ந்த உணவுகள் முடி உதிர்வதை தடுத்து, அதிக வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்கிறார்கள் அவர்கள். இதில் சிறப்பு என்னவென்றால், இதற்காக பெரிதாக செலவு இல்லை. உடல் நலத்திற்கும் இந்த உணவுப் பொருட்களால் நல்லதுதானே தவிர, கெடுதல் இல்லை.

Best Foods For Hair Growth: முடி வளர்ச்சிக்கு உகந்த உணவு

முடி வளர்ச்சிக்கு உகந்ததாக பட்டியல் இடப்படும் உணவு வகைகளை இங்கே காணலாம்.

1. கீரைகள்- காய்கறிகள்: பீட்டா கரோட்டின் என்கிற வண்ணம் சார்ந்த சத்துகள் மிகுந்த காரட், ஸ்வீட் உருளைக் கிழங்கு, பழக் கூழ், பரட்டைக் கீரை, அடர் பச்சைக் கீரைகள், பூசணிக்காய் ஆகியன முடி வளர உகந்தவை.

2. முட்டை- நிலக்கடலை: பயோட்டின் மிகுந்த உணவுகளான முட்டை, நிலக்கடலை, கொழுப்பு குறைக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் பாலாடைக் கட்டி, கோதுமை தவிடு, நன்னீர் மீன், பாதாம் ஆகியன முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துபவை.

3. முளைத்த கோதுமை- தயிர்: துத்தநாக சத்து மிகுந்த நட்ஸ் மற்றும் சீட்ஸ், வேர்க்கடலை வெண்ணெய், முளைவிட்ட கோதுமை, பாலாடைக் கட்டி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து கிடைக்கும் தயிர் ஆகியன முடி வளர்ச்சிக்கு உகந்தவை.

4. குடை மிளகாய்: பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் குடை மிளகாய்களை உணவில் பயன்படுத்துவதால், விட்டமின் சி கிடைக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றது.

5. சோயா பீன்ஸ்- பயறு வகைகள்: டோபு எனப்படும் ஒருவகை சோயா தயிர், சோயா பீன்ஸ், பயறு வகைகள் ஆகியன புரோட்டீன்- இரும்புச் சத்து மிகுந்த உணவுகள். இவையும் முடி வளர்ச்சிக்கு உதவக் கூடியவை.

மேற்கண்டவை முழுமையான மருத்துவ ஆலோசனைகள் அல்ல. எனினும் உணவு சார்ந்த தகவல்கள் மட்டுமே. அன்றாடம் நம் இல்லத்தில் கிடைக்கும் எளிய உணவுப் பொருட்கள் மூலமாகவே நம் உடல் நலத்தைப் பேண அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

 

Hair Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment