முடி உதிர்வு, பொடுகு மற்றும் பல முடி சார்ந்த பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகிறோம். ஃபிட்னஸ் ப்ளாகர் லோகாப்ரித்திகா சீனிவாசன் கூட இதே பிரச்சனைகளை எதிர்கொண்டவர். ஆனால் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொண்ட பிறகு, அவரது முடி ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதே போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் மற்றவர்களுக்கு உதவ, அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்திய ஆறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த ஆறு விஷயங்கள் இதோ:
தினமும் காலை இன்வெர்ஷன் ஹேர் கோம்பிங் (Inversion Hair Combing): தலைகீழாக குனிந்து தலை சீவுவது, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் முருங்கை பவுடர்: முருங்கை பவுடரில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்.
நகங்கள் தேய்த்தல்: இது ஒரு பாரம்பரிய பயிற்சி என்றாலும், இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கபாலபதி கிரியா: இது ஒரு யோகப் பயிற்சி, இது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
சீரம் தவறாமல் பயன்படுத்துதல்: முடி வளர்ச்சிக்கு தேவையான உட்பொருட்களைக் கொண்ட சீரம்களைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு உதவும்.
மென்மையான உச்சந்தலை மசாஜ்: உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சிக்கு துணைபுரியும்.
இந்த குறிப்புகளுடன், லோகாப்ரித்திகா சீனிவாசன் ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார். "முடி வளர்ச்சிக்கும், வலிமைக்கும் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்கிறேன். வைட்டமின்கள் A மற்றும் C நிறைந்த கீரை வகைகள், காலிஃபிளவர் போன்ற இலை காய்கறிகளை நிறைய சாப்பிடுகிறேன். இவை சரும செல்களை உற்பத்தி செய்து உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அவகேடோ, நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் முடியை ஈரப்பதமாக வைத்து வறட்சியைத் தடுக்கின்றன. நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்" என்று சீனிவாசன் கூறினார்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
சீனிவாசனின் இந்த குறிப்புகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டபோது, கெராடெர்ம் கிளினிக்ஸ் நிறுவனர், பிரபல காஸ்மெட்டாலஜிஸ்ட் டாக்டர். மஹ்னாஸ் ஜஹான் பேகம், உச்சந்தலை மசாஜ் மற்றும் ரெடென்சில், ப்ரோகாபில் போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உட்பொருட்களையும் கொண்ட சீரம் பயன்படுத்துவது நல்ல குறிப்புகள் என்று பகிர்ந்து கொண்டார். "உச்சந்தலையை மெதுவாக தூண்டுவது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று டாக்டர் பேகம் கூறினார்.
இருப்பினும், "நகங்களை தேய்ப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று அவர் கூறினார். "இன்வெர்ஷன் ஹேர் கோம்பிங் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று டாக்டர் பேகம் மேலும் தெரிவித்தார்.
முடி வளர்ச்சிக்கு ஒரு மாய நிவாரணம் இல்லாவிட்டாலும், முருங்கை பவுடர் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சில நன்மைகளை அளிக்கலாம் என்று டாக்டர் பேகம் மேலும் கூறினார். ஒரு சீரான உணவு மிக அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
Read in English: 6 things a fitness blogger does for shiny, healthy, thick hair