தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருள் சேருங்க… இளநரை மறைந்து முடி கருப்பாகும்; டாக்டர் நர்மதா
இளம் வயதிலேயே தலை நரைப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. இந்தப் பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் இளநரையை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் நர்மதா.
இளம் வயதிலேயே தலை நரைப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. இந்தப் பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் இளநரையை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் நர்மதா.
தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருள் சேருங்க… இளநரை மறைந்து முடி கருப்பாகும்; டாக்டர் நர்மதா
இளம் வயதிலேயே தலை நரைப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. இந்தப் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் இளநரையை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் நர்மதா.
Advertisment
இளநரைக்கு முக்கிய காரணங்களாக சிலவற்றை டாக்டர் நர்மதா பட்டியலிடுகிறார். உடலில் வைட்டமின் டி, தாமிரம், இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் குறைவது முக்கிய காரணம். மேலும், நல்ல கொழுப்பின் அளவு குறைவது, தைராய்டு பிரச்னைகள், மரபியல் காரணிகள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவையும் நரையைத் தூண்டுகின்றன என்று அவர் விளக்கினார். தொடர்ந்து பயன்படுத்தப்படும் ரசாயன முடி சாயங்கள் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் பிரச்னையை தீவிரமாக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இரும்புச்சத்து அவசியம்: கீரை வகைகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவும்.
வைட்டமின் சி: இரும்புச்சத்து நன்கு உறிஞ்சப்பட வைட்டமின் சி அவசியம். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
சத்து நிறைந்த ஜூஸ்: ஆப்பிள், பீட்ரூட், கேரட் (ABC ஜூஸ்) அல்லது நெல்லிக்காய், பீட்ரூட், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் குடிப்பது உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.
இரும்பு - கால்சியம் சமநிலை: இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை கால்சியம் நிறைந்த உணவுகளுடன் ஒரே நேரத்தில் சாப்பிடாதீர்கள். உதாரணமாக, கீரையை தயிருடன் சேர்த்து உண்பதைத் தவிர்க்கலாம்.
சூரிய ஒளியும் வைட்டமின் Dயும்: காலை 8-10 மணி அல்லது மாலை 4-6 மணிக்குள் மிதமான சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகள் மற்றும் சூரியகாந்தி, பூசணி விதைகள் போன்றவற்றை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது நல்லது. இவை தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளன.
வைட்டமின் பி12: அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், ஈரல் சாப்பிடலாம். சைவ உணவு உண்பவர்கள் பால் பொருட்கள், பழைய சாதம் மற்றும் காளான்களை உட்கொள்ளலாம்.
நல்ல கொழுப்புகள்: அக்ரூட் பருப்புகள், நெய் போன்ற நல்ல கொழுப்புகளை உணவில் சேர்ப்பது முடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
முடி பராமரிப்புக்கான வீட்டு வைத்தியம்: டாக்டர் நர்மதா முடி எண்ணெய் தயாரிக்கும் முறையை பரிந்துரைக்கிறார். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில், 3 கைப்பிடி அரைத்த கறிவேப்பிலை, சிறிதளவு கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி பயன்படுத்தவும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர, நரை முடி, முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்னைகள் குறைந்து, முடி அடர்த்தியாக வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.