தேங்காய் பாலை இப்படி பயன்படுத்திப் பாருங்க… தலை முடிக்கு செம்ம டிப்ஸ்

Hair growth home made remedies: கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் மிகச் சிறந்த கண்டிஷனராக தேங்காய் பால் விளங்கும்.

Hair growth tamil tips

Hair growth tamil tips: தேங்காய் பால் மிகவும் சுவையானது என்று நம்மில் அனைவருக்கும் தெரியும்.  ஆனால், இது ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அறியப்படுகிறது.  எல்லாவற்றையும் விட, இது கூந்தலுக்கு மகத்தான நன்மைகளைக் கொண்டுள்ளதால்,  கூந்தல் பராமரிப்பில் தேங்காய் பால் முக்கிய ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும்.

தேங்காய் பாலில் கொழுப்பு சத்து, புரதம், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ்  பொட்டாசியம், வைட்டமின் பி 12, ஜிங்க் (துத்தநாகம்) போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நமது உச்சந்தலையில் தேங்காய் பால்  இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.  பொதுவாக, வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு சத்து முடி அடர்த்தியை உறுதி செய்கிறது.

Hair growth tamil tips, Coconut milk usage:

தேங்காய் பால் கண்டிஷனர்:  

தேங்காய் பால் – கால் கப்

தேன் – 2 டேபிள் ஸ்பூன்

விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1

ரோஸ் வாட்டர் — சில துளிகள்

கிளிசரின் – சில துளிகள்

முதலில் இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா கலவைகளையும் கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை போட்டு, தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் மிகச் சிறந்த கண்டிஷனராக தேங்காய் பால் விளங்கும்.   (Source- vikaspedia)

வீட்டில் எப்படி தேங்காய் பால் செய்வது?   

 

நீங்கள் இதை எலுமிச்சை சாறுடன் இணைத்து பயன்படுத்தலாம்.  உங்கள் உச்சந்தலை எப்போதும் எண்ணெய் நிறைந்ததாக  இருக்க உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hair growth tamil tips coconut milk home made hair growth conditioner

Next Story
சொன்னாப் போதாது… தயிர் வடை இப்படிச் செய்யணும்!Dahi vada recipe, Thayir Vadai Recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com