Hair Growth Tamil Tips, Curry Leaves thuvaiyal Tamil Video: கறிவேப்பிலை, மிகுந்த பயனுள்ள ஒரு உணவுப் பொருள். இரும்புச் சத்து இதில் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது இது. அதேபோல தலைமுடி கருகருவென வளரவும், இளநரை போக்கவும், முடி உதிர்தலை தவிர்க்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.
Advertisment
கறிவேப்பிலை மூலமாக குழம்பு, ரசம், சூப் என பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உண்ணலாம். அதேபோல கறிவேப்பிலை துவையல் மிக எளிதில் செய்யத்தக்க சைட் டிஷ். இதை எப்படி சுவையாக தயாரிப்பது? என இங்கு பார்க்கலாம்.
Curry Leaves thuvaiyal Tamil Video: கறிவேப்பிலை துவையல்
Advertisment
Advertisements
கறிவேப்பிலை துவையல் செய்யத் தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1கப், காய்ந்த மிளகாய் - 3, உளுந்து - 2 டீ ஸ்பூன், பூண்டு - 5 பற்கள், புளி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை துவையல் செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இங்கே கூறப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சூடு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்தால் கறிவேப்பிலை துவையல் தயார்.
சாதம், டிபன் என அனைத்துக்கும் பொருத்தமான சைட் டிஷ்ஷாக கறிவேப்பிலை துவையல் இருக்கும். ஒருமுறை இந்த சத்தான துவையலை டேஸ்ட் செய்து பாருங்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"